தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : பிப் 29, 2024 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 01:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிப்டி

முந்தைய முடிவு : 22,198.35நேற்றைய முடிவு: 21,951.15மாற்றம்: 247.20 இறக்கம் சிவப்பு



சென்செக்ஸ்

முந்தைய முடிவு: 73,095.22நேற்றைய முடிவு: 72,304.88மாற்றம்: 790.34 இறக்கம் சிவப்பு



நிறுவனங்கள் நிலை

(மும்பை பங்கு சந்தை) ஏற்றம் கண்டவை : 40%இறக்கம் கண்டவை : 58%மாற்றம் காணாதவை: 2%



நேற்று போல் இன்று இல்லை


 தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக, சந்தை சதிராடிக் கொண்டிருக்கிறது. முந்தைய இரண்டு நாட்களின் சரிவிலிருந்து ஒருவழியாக, நேற்று முன்தினம் சந்தை மீண்டு விட்டது என சந்தோஷப்பட்டால், நேற்று கடுமையான சரிவை சந்தித்து கலங்க வைத்துவிட்டது
 நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ், கிட்டத்தட்ட ஒரு சதவீத இழப்பை கண்டுள்ளது. நிப்டி, அதன் 22,000 புள்ளிகள் என்ற நிலையிலிருந்து கீழே இறங்கிவிட்டது உலக சந்தை போக்குகள் கைகொடுக்காத நிலையில், வங்கி துறை பங்குகள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் ஆகியவை அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டது, சந்தை இறக்கத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது
 ஆசிய சந்தைகளில் சியோல் சிறிது ஏற்றம் கண்ட போதிலும், டோக்கியோ, ஷாங்காய், ஹாங்காங் சந்தைகள் சரிவைக் கண்டன. ஐரோப்பிய சந்தைகளின் போக்கும் சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை. உலக முதலீட்டாளர்கள், அமெரிக்காவின் தனிநபர் நுகர்வு செலவு உள்ளிட்ட பொருளாதாரம் சார்ந்த தரவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
 அன்னிய முதலீட்டாளர்கள், கடந்த செவ்வாயன்று, கிட்டத்தட்ட 1,509 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்பனை செய்துள்ளதாக வந்த தரவுகள், சந்தைக்கு ஆதரவானதாக இல்லை
 நேற்றைய வர்த்தகத்தில் ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்பி, ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகளை அணுகுவது குறித்த எச்சரிக்கை அறிக்கையை மியூச்சுவல் பண்டு நிறுவனங்களுக்கு அனுப்பியது
 வாகனம் , எண்ணெய் எரிவாயு, மின்சாரம், ரியல் எஸ்டேட் போன்ற துறைகளை சேர்ந்த பல பங்குகள், இரண்டு சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தன
 சென்செக்ஸ் குறியீட்டில் நான்கே நான்கு நிறுவன பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டன. மீதி 26 நிறுவன பங்குகளின் விலையும் சரிவைக் கண்டன. பவர் கிரிட் அதிகபட்சமாக 4.43 சதவீதம் சரிந்தது. இதேபோல் நிப்டி குறியீட்டிலும் 46 நிறுவன பங்குகள் விலை சரிவைக் கண்டன. நான்கு நிறுவன பங்குகள் மட்டுமே விலை உயர்ந்தன.



ஏற்றம் கண்ட பங்குகள்

 எச்.யு.எல்., இன்போசிஸ் டி.சி.எஸ்., பார்தி ஏர்டெல்



இறக்கம் கண்ட பங்குகள்

 பவர் கிரிட் கார்ப் அப்போலோ ஹாஸ்பிட்டல் பஜாஜ் ஆட்டோ மாருதி சுசூகி



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us