தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : மார் 13, 2024 12:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2024 12:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாட்டி எடுத்த சந்தை


 நேற்றைய தினம், சந்தை மிகுந்த ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இருப்பினும், ஒருவழியாக சமாளித்து இறுதியில் ஏற்றத்துடன் முடிவடைந்தன
 மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் பிரிவில், எச்.டி.எப்.சி., பேங்க், டி.சி.எஸ்., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற பெரும் நிறுவன பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதை அடுத்து, இக்குறியீடு 0.22 சதவீத உயர்வுடன் முடிவடைந்தது.
 அதேசமயம், தேசிய பங்கு சந்தையின் நிப்டி, கிட்டத்தட்ட பெரிய மாற்றம் எதுவும் இன்றி மிகச்சிறிய ஏற்றத்தைக் கண்டது. வெறும் 0.01 சதவீத உயர்வை மட்டுமே நிப்டி கண்டது.
 முந்தைய நாள், லாபத்தை அறுவடை செய்யும் நோக்கில் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தனர் முதலீட்டாளர்கள். ஒரு வரம்புக்குள் நின்று வர்த்தகத்தை மேற்கொண்டனர். அதனால் ஓரளவு சந்தை நிலைப்படுத்தப்பட்டது.
 இருப்பினும், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள், நேற்றைய வர்த்தகத்தில் அதிக அழுத்தத்தை சந்தித்தன. மிகைப்படுத்தப்பட்ட மதிப்பில் அவை வர்த்தகமாகி வருவதாக முதலீட்டாளர்கள் கருதியதால், இத்தகைய அழுத்தத்தைக் கண்டன. பி.எஸ்.இ., ஸ்மால்கேப் இண்டெக்ஸ் 2.11 சதவீத சரிவையும்; மிட்கேப் 1.31 சதவீத சரிவையும் கண்டன.
 உலக சந்தைகளை பொறுத்தவரை, அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான தரவுகளை எதிர்நோக்கி முதலீட்டாளர்கள் இருந்தனர். இந்தியாவை பொறுத்தவரை, முதலீட்டாளர்கள் ஜனவரி மாத சில்லரை விலை பணவீக்கம் மற்றும் உற்பத்தி துறை சார்ந்த தரவுகள் ஆகியவை வெளியாக இருந்த நிலையில், சற்று கவனத்துடனேயே சந்தையை அணுகினர்
 'ஜியோ பைனான்ஷியல் சர்வீசஸ்' நிறுவனத்தின் பங்குகள், கிட்டத்தட்ட 5.27 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, அதன் 52 வார உயர்வான 374.50 ரூபாயை எட்டியது குறிப்பிடத்தக்கது
 இந்திய பங்கு சந்தைகளில், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்களன்று 4,213 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை வாங்கி இருந்தனர் உலகளவிலான பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரலுக்கு 0.86 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 82.92 அமெரிக்க டாலராக இருந்தது
 அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, மூன்று பைசா சரிந்து 82.78 ரூபாயாக இருந்தது.



ஏற்றம் கண்ட பங்குகள்


 எச்.டி.எப்.சி., பேங்க் டி.சி.எஸ்., எல்.டி.ஐ., மைண்டுட்ரீ மாருதி சுசூகி இன்போசிஸ்



இறக்கம் கண்ட பங்குகள்


 அதானி என்டர்பிரைசஸ் சிப்லா கிராஸிம் அதானி போர்ட்ஸ் எஸ்.பி.ஐ.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us