டைம்லைன்
தற்போதைய செய்தி
டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
மாவட்டம்
ADDED : மார் 13, 2024 08:55 PM
முந்தைய முடிவு : 22,335.70நேற்றைய முடிவு: 21,997.70மாற்றம்: 338.00 இறக்கம் சிவப்பு
முந்தைய முடிவு: 73,667.96நேற்றைய முடிவு: 72,761.89மாற்றம்: 906.07 இறக்கம் சிவப்பு
நேற்றைய தினம், பங்கு சந்தை வர்த்தகர்களுக்கு வருத்தம் தரும் நாளாகவே அமைந்தது. கிட்டத்தட்ட 13.50 லட்சம் கோடி ரூபாய் இழப்பை அவர்கள் சந்திக்க வேண்டியதாயிற்று. ஆரம்பத்தில் ஏற்றத்துடன் துவங்கிய சந்தை, விரைவிலேயே சரிவுப் பாதைக்கு திரும்பியது மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 900 புள்ளிகள் அளவுக்கு சரிவைக் கண்டு, 73,000 எனும் நிலைக்கு கீழே சென்றது. தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 1.51 சதவீதம் சரிவைக் கண்டது சந்தையில் ஸ்மால் கேப், மிட் கேப் குறியீடுகள் கடுமையான சரிவைக் கண்ட நிலையில், பங்குகளை விற்பனை செய்வது அதிகரித்தது. எரிசக்தி, உலோக துறைகளை சேர்ந்த பங்குகள் அதிகஅளவில் விற்பனை செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, சந்தை சரிவைக் கண்டது உலக சந்தைகளின் போக்கு சாதகமாக இருந்தும்கூட, ஸ்மால் கேப், மிட் கேப் பங்குகள் ஆட்டம் கண்டதை அடுத்து, சந்தை இறக்கப் பாதைக்கு சென்றுவிட்டது. பி.எஸ்.இ., ஸ்மால் கேப் குறியீடு 5.11 சதவீத சரிவையும், மிட்கேப் குறியீடு 4.20 சதவீத சரிவையும் கண்டது 'பவர்கிரிட்' நிறுவன பங்குகள் மிக அதிகளவிலான சரிவைக் கண்டன. இந்நிறுவன பங்குகள் விலை, கிட்டத்தட்ட 7 சதவீதம் அளவுக்கு சரிந்து போனது. ஐ.டி.சி., நிறுவன பங்குகள் விலை 4 சதவீதம் அளவுக்கு உயர்வைக் கண்டன. இதனால், இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 23,000 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்க ஒன்றாகும் ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரை, சியோல் ஏற்றத்தையும், டோக்கியோ, ஷாங்காய், ஹாங்காங் சந்தைகள் சரிவையும் கண்டன. ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின. செவ்வாயன்று, அமெரிக்க சந்தைகள் சாதகமான நிலையை சந்தித்தன உலக பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரலுக்கு 1.09 சதவீதம் உயர்ந்து, 82.81 அமெரிக்க டாலராக இருந்தது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்று 5 பைசா குறைந்து, 82.85 ரூபாயாக இருந்தது.
(மும்பை பங்கு சந்தை) ஏற்றம் கண்டவை : 1%இறக்கம் கண்டவை : 88மாற்றம் காணாதவை: 2%
ஐ.டி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் கோட்டக் மஹிந்திரா சிப்லா பஜாஜ் பைனான்ஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன் கோல் இந்தியா அதானி போர்ட்ஸ் அதானி என்டர்பிரைசஸ் என்.டி.பி.சி.,
இறக்கம் கண்டவைமாற்றம் காணாதவை