sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

பங்கு சந்தை நிலவரம்

/

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : மார் 20, 2024 10:34 PM

Google News

ADDED : மார் 20, 2024 10:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சரிவில் துவங்கி மீண்ட சந்தை


* நேற்றைய வர்த்தகத்தில், ஐ.டி.சி., ரிலையன்ஸ், எஸ்.பி.ஐ., நிறுவன பங்குகள் விற்பனை அதிகரித்த நிலையில், சென்செக்ஸ், நிப்டி ஆகியவை, உயர்வைக் கண்டன. சென்செக்ஸ் 0.12 சதவீதமும்; 0.10 சதவீதமும் உயர்ந்து, ஒருவழியாக சரிவிலிருந்து தங்களை மீட்டுக் கொண்டுள்ளன
* உலக சந்தைகளின் சாதகமான போக்கு, நாட்டின் நேரடி வருமான வரி வருவாய் அதிகரிப்பு, அன்னிய நிறுவன முதலீடுகள் வரத்து ஆகியவையும், சந்தையை சரிவிலிருந்து காப்பாற்றின
* மாருதி சுசூகி நிறுவன பங்குகள் விலை, வர்த்தகத்தின் இடையே, முதன் முறையாக 12,000 ரூபாயை தொட்டது.
* டாடா கெமிக்கல்ஸ் நிறுவன பங்குகள், கிட்டத்தட்ட 8 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டது. மேலும் டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டி.சி.எஸ்., ஆகிய நிறுவன பங்குகளின் விலையும் சரிவைக் கண்டது
* பல பங்குகளில் முதலீட்டாளர்கள் லாபத்தை அறுவடை செய்து கொள்ளும் விதமாக, அவற்றை அதிகளவில் விற்பனை செய்தனர்
* மும்பை பங்கு சந்தையில் 13 துறைகளை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள், விலை அதிகரிப்பையும்; 7 துறைகளை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள், விலை சரிவையும் கண்டன
* அமெரிக்க பெடரல் வங்கி அதன் வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதை அடுத்து பெரும்பாலான முதலீட்டாளர்கள் மிக கவனமாகவே சந்தையை அணுகினர்
* ஆசிய சந்தைகளில் சியோல், ஷாங்காய், ஹாங்காங் ஆகியவை ஏற்றம் கண்டன. ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வந்தன. அமெரிக்க சந்தைகள் செவ்வாயன்று ஏற்றத்தை கண்டன
* அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 13 பைசா சரிந்து, 83.16 ரூபாயாக இருந்தது
* உலகளவிலான பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரலுக்கு 0.80 சதவீதம் சரிந்து, 86.68 அமெரிக்க டாலராக இருந்தது



நிப்டி


முந்தைய முடிவு : 21817.45நேற்றைய முடிவு: 21,839.10மாற்றம்: 21.65 ஏற்றம் பச்சை



சென்செக்ஸ்


முந்தைய முடிவு: 72,012.05நேற்றைய முடிவு: 72,101.69மாற்றம்: 89.64 ஏற்றம் பச்சை



ஏற்றம் கண்ட பங்குகள்


* ஐச்சர் மோட்டார்ஸ்* மாருதி சுசூகி* பவர் கிரிட் கார்ப்பரேஷன்* நெஸ்ட்லே* ஓ.என்.ஜி.சி.,



இறக்கம் கண்ட பங்குகள்


* டாடா ஸ்டீல் * டாடா கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ்* டாடா மோட்டார்ஸ்* ஆக்ஸிஸ் பேங்க்* சிப்லா



நிறுவனங்கள் நிலை


(மும்பை பங்கு சந்தை) ஏற்றம் கண்டவை : 41%இறக்கம் கண்டவை :56%மாற்றம் காணாதவை:3%








      Dinamalar
      Follow us