
ஏழு நாட்களுக்கு பின் சரிவு
வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, நிப்டி மற்றும் சென்செக்ஸ் இறக்கத்துடன் நிறைவு செய்தன. கடந்த ஏழு வர்த்தக நாட்களாக தொடர்ச்சியாக சந்தை குறியீடுகள் கண்ட உயர்வுக்கு, நேற்று முற்றுப்புள்ளி விழுந்தது. நிப்டி குறியீட்டில் அதிகபட்சமாக, ரியல் எஸ்டேட் துறை குறியீடு 1.41 சதவீதம் சரிவையும், மருந்து துறை குறியீடு 1 சதவீதத்துக்கு மேல் உயர்வையும் கண்டன.
சரிவுக்கு காரணங்கள்
1. லாபத்தை பதிவு செய்த முதலீட்டாளர்கள்
2. ஐரோப்பிய மற்றும் ஆசிய சந்தைகளின் சரிவு
3. நிறுவனங்களின் நான்காவது காலாண்டு முடிவுகளில் ஏமாற்றம்
4. பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை குறித்த பதற்றம்
உலக சந்தைகள்
பஹல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானுடனான துாதரக ரீதியான உறவுகளை இந்தியா துண்டித்துள்ளது. இதன் தாக்கத்தால் நேற்று பாகிஸ்தானின் முக்கிய பங்கு சந்தையான 'கராச்சி 100' குறியீடு, வர்த்தக நேரத்தின் போது 2,565 புள்ளிகள் சரிவு கண்டது. பின் மீண்டு, 1,000 புள்ளிகள் சரிவுடன் நிறைவு செய்தது.
விலை குறைந்த பங்குகள்
ஹிந்துஸ்தான் யுனிலீவர் : 4%
பார்தி ஏர்டெல் : 2%
ஐச்சர் மோட்டார்ஸ் : 2%
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 8,251 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.03 சதவீதம் குறைந்து, 66.10 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 பைசா அதிகரித்து, 85.33 ரூபாயாக இருந்தது.

