தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : மே 07, 2025 11:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2025 11:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பங்கு சந்தையும் அதிர்ந்தது


இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, நிப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் 9 பயங்கரவாத நிலைகள் மீது நள்ளிரவில் இந்திய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தின. இதன் தாக்கத்தால், நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போதே, சந்தை குறியீடுகள் அதிக ஏற்ற, இறக்கத்துடன் துவங்கின. இந்தியா -- பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, நாள் முழுதும் ஊசலாட்டத்துடன் வர்த்தகம் நடந்தது. எனினும், இந்திய முதலீட்டாளர்கள் நிதானத்துடன் செயல்பட்டதால், முடிவில் சந்தை குறியீடுகள் ஓரளவு உயர்வுடன் நிறைவு செய்தன.

ஊசலாட்டத்துக்கு காரணங்கள்

 பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்

 தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் குவிந்து வருவது

 இந்திய முதலீட்டாளர்கள் நிதானத்துடன் செயல்பட்டது

உலக சந்தைகள்

இந்தியாவின் பதிலடி தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் பங்குச் சந்தையின் கராச்சி 100 குறியீடு, நேற்றைய வர்த்தகத்தின் போது 6,560.82 புள்ளிகள் அளவுக்கு சரிவை கண்டது. கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை அறிவித்த போது, கராச்சி 100 குறியீடு ஒரே நாளில் 8,700 புள்ளிகள் சரிவை சந்தித்தது.

உயர்வு கண்ட பங்குகள் (நிப்டி)

 டாடா மோட்டார்ஸ் : 5.18%

 ஜியோ பைனான்ஸ் : 2.11 %

 பஜாஜ் பைனான்ஸ்: 2.04 %

சரிவை கண்ட பங்குகள் (நிப்டி)

 ஏசியன் பெயின்ட்ஸ் : 3.97 %

 சன் பார்மா : 2.10 %

 பஜாஜ் ஆட்டோ : 1.26 %

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us