தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : மே 09, 2025 12:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2025 12:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போர்மேகம் சூழ்வதால் சரிவு


இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, நிப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவடைந்தன. எல்லையில் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி வரும் பாகிஸ்தான், அதன் திட்டத்தை முறியடித்த வான் பாதுகாப்பு அமைப்பை சேதப்படுத்திய இந்திய ராணுவம் என போர் பதற்றம் தீவிரமடைந்து உள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் வங்கி, நுகர்பொருட்கள் மற்றும் வாகனத்துறை பங்குகளை அதிகளவில் விற்று லாபத்தை பதிவு செய்தனர். அதிகபட்சமாக நிப்டி குறியீட்டில், ரியல் எஸ்டேட் துறை குறியீடு 2.47 சதவீதமும், உலோகத்துறை குறியீடு 2.09 சதவீதமும் சரிவை கண்டன.

சரிவுக்கு காரணங்கள்


 இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் சூழல் தீவிரமடைந்து வருவது

 முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்று லாபத்தை பதிவு செய்தது

உலக சந்தைகள்


இந்தியாவின் பதிலடி தாக்குதல் எதிரொலியாக இரண்டாவது நாளாக நேற்றும் பாகிஸ்தான் பங்குச் சந்தையின் கராச்சி 100 குறியீடு மளமளவென சரிந்து, 7 சதவீதம் வீழ்ச்சி கண்டதால், வர்த்தகம் நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் வர்த்தகம் துவங்கியது. கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு, அந்நாட்டின் பங்குச்சந்தை சந்தித்த மோசமான வீழ்ச்சி இது.

சரிவு கண்ட பங்குகள் (நிப்டி)

 ஸ்ரீராம் பைனான்ஸ் : 4.48 %

 எட்டர்னல் : 4.18 %

 மஹிந்திரா அண்டு மஹிந்திரா : 3.55 %

அன்னிய முதலீடு


அன்னிய முதலீட்டாளர்கள் 2,008 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.

கச்சா எண்ணெய்


உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு ஒரு சதவீதம் அதிகரித்து, 61.75 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 81 பைசா சரிந்து, 85.58 ரூபாயாக

இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us