
பங்குகளை விற்றதால் சரிவு
வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான நிப்டி, சென்செக்ஸ் இறக்கத்துடன் நிறைவு செய்தன. நேற்று முன்தினம் ஒரே நாளில் சந்தை குறியீடுகள் 4 சதவீதம் வரை உயர்வு கண்ட நிலையில், நேற்றைய வர்த்தகத்தின் போது முதலீட்டாளர்கள், ஐ.டி., நுகர்பொருட்கள் மற்றும் வாகனத்துறை பங்குகளை அதிகளவில் விற்று லாபத்தை பதிவு செய்தனர். இதனால், நிப்டி, சென்செக்ஸ் குறியீடுகள் தலா ஒரு சதவீதத்துக்கு மேல் சரிவை கண்டன.
அமெரிக்கா-சீனா பரஸ்பர வரியை குறைத்ததால், வர்த்தக போர் அபாயம் குறைந்தது, இந்தியா -- பாக்., இடையே மோதல் பதற்றம் குறைந்தது ஆகியவற்றால், முதலீட்டாளர்கள் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டனர். அதிகபட்சமாக நிப்டி குறியீட்டில், ஐ.டி., துறை குறியீடு 2.42 சதவீதம் சரிவையும், ஊடகத்துறை குறியீடு 1.66 சதவீதம் உயர்வுடன் நிறைவடைந்தன.
உயர்வுக்கு காரணங்கள்
அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தத்தால் ஏற்படும் பாதகம்
கைகொடுக்காத நிறுவனங்களின் நான்காவது காலாண்டு முடிவுகள்
பங்குகளை விற்று லாபத்தை பதிவு செய்த முதலீட்டாளர்கள்
சரிவு கண்ட பங்குகள் - நிப்டி
இன்போசிஸ் : 3.63%
எட்டர்னல் : 3.34%
பவர்கிரிடு : 3.19%
எச்.சி.எல்.,டெக் : 3.02%
டி.சி.எஸ்., : 2.83%
உலக சந்தைகள்
சீனாவுடன் வர்த்தக போர் அபாயம் குறைந்ததால், அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் நிறைவு செய்தன. இதன் தொடர்ச்சியாக, ஆசிய சந்தைகளான ஜப்பானின் நிக்கி, தென்கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. ஹாங்காங்கின் ஹாங்சேங் மட்டும் சரிவுடன் நிறைவு செய்தது. ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் உயர்வுடன் வர்த்தகமாகின.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 477 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.32 சதவீதம் அதிகரித்து, 65.17 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றும் மாற்றமின்றி, 85.36 ரூபாயாக இருந்தது.