
லாபத்தை எடுத்த முதலீட்டாளர்கள்
இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்கு சந்தை குறியீடுகளான நிப்டி, சென்செக்ஸ் இறக்கத்துடன் நிறைவு செய்தன. தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் சந்தை கண்ட உயர்வுக்கு நேற்று தடை ஏற்பட்டது.
ஆசிய சந்தை போக்குகளின் தொடர்ச்சியாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போதே, சந்தை குறியீடுகள் சரிவுடன் துவங்கின. தொடர்ந்து, ஐ.டி., வங்கி மற்றும் உலோகத்துறை பங்குகளை விற்று, முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ததால், வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 384 புள்ளிகள் வரை இறக்கம் கண்டது. முடிவில், சந்தை குறியீடுகள் ஓரளவு சமாளித்து, சிறிய
இறக்கத்துடன் நிறைவு செய்தன. வாராந்திர அடிப்படையில், நிப்டி, சென்செக்ஸ் உயர்வுடன் நிறைவடைந்தன.
உலக சந்தைகள்
வியாழன் அன்று அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் நிறைவு செய்தன. தென்கொரியாவின் கோஸ்பி தவிர ஜப்பானின் நிக்கி, ஹாங்காங்கின் ஹாங்சேங், சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் சரிவுடன் வர்த்தகமாகின. ஐரோப்பிய சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்தன.
சரிவுக்கு காரணங்கள்
ஆசிய சந்தை போக்குகளில் காணப்பட்ட பாதகமான சூழல்
பங்குகளை விற்று லாபத்தை பதிவு செய்த முதலீட்டாளர்கள்
கைகொடுக்காத நிறுவனங்களின்
நான்காவது காலாண்டு முடிவுகள்
உயர்வு கண்ட பங்குகள் - நிப்டி
பாரத் எலக்ட்ரானிக்ஸ் 3.82%
டாடா கன்ஸ்யூமர் 1.99%
பஜாஜ் ஆட்டோ 1.98%
சரிவு கண்ட பங்குகள் -- நிப்டி
பார்தி ஏர்டெல் 2.83%
எச்.சி.எல்.,டெக் 2.06%
இன்போசிஸ் 1.46%
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 8,831 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.09 சதவீதம் அதிகரித்து, 64.59 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா அதிகரித்து, 85.57 ரூபாயாக இருந்தது.