தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : ஜூன் 06, 2025 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2025 01:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இரண்டாவது நாளாக உயர்வு


நேற்று, சந்தை குறியீடுகளான நிப்டி, சென்செக்ஸ் நல்ல உயர்வுடன் நிறைவு செய்தன. ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை கூட்டத்தின் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, சந்தை குறியீடுகள் லேசான சரிவுடன் துவங்கின.

எனினும், மீண்டும் அன்னிய முதலீடுகள் வரத்து அதிகரிப்பு, உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழல் காரணமாக ரிலையன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். இதனால், சந்தை குறியீடுகள் உயர்வுடன் வர்த்தகமாகின.

நேற்றைய வர்த்தக நேரத்தின்போது சென்செக்ஸ் 912.88 புள்ளிகள் வரை உயர்வு கண்டு, முடிவில் குறைந்து 443.79 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. தொடர்ச்சியாக, இரண்டாவது நாளாக சந்தை குறியீடுகள் ஏற்றம் கண்டன.

உலக சந்தைகள்


அமெரிக்க சந்தைகள் கலவையுடன் நிறைவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை,

ஜப்பானின் நிக்கி குறியீடு இறக்கத்துடனும்; தென்கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய்

எஸ்.எஸ்.இ., ஹாங்காங்கின் ஹாங்சேங் குறியீடுகள் உயர்வுடனும் நிறைவு செய்தன. ஐரோப்பியசந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகின.

உயர்வுக்கு காரணங்கள்


1 மீண்டும் அன்னிய முதலீடுகள் அதிகரிக்க துவங்கியது

2 உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல்

3 ரெப்போ வட்டி குறைப்பு தொடர்பான எதிர்பார்ப்புகள்

உயர்வு கண்ட பங்குகள் --- நிப்டி (%)


எட்டர்னல் 4.53

டிரென்ட் 3.15

டாக்டர் ரெட்டீஸ் 3.05

பவர் கிரிட் 2.01

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி 1.77

அன்னிய முதலீடு


அன்னிய முதலீட்டாளர்கள் 208 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.

கச்சா எண்ணெய்


உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.35 சதவீதம் உயர்ந்து, 65.14 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசா அதிகரித்து, 85.79 ரூபாயாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us