ADDED : ஜூன் 11, 2025 12:46 AM

வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, நாள் முழுதும் பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. காலையில் உயர்வுடன் துவங்கிய பங்குச் சந்தைகள், இறுதியில் கிட்டத்தட்ட மாற்றமின்றி முடிவடைந்தன. வர்த்தக நேர துவக்கத்தில், சென்செக்ஸ் 235 புள்ளிகள் உயர்ந்தது.
பின் ரிலையன்ஸ், எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட பெரு நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவு விற்பனை செய்ததால், 204 புள்ளிகள் வரை சரிந்தது. இறுதியில்53 புள்ளிகள் சரிவுடன் முடிவடைந்தது. நிப்டி தொடர்ந்து ஐந்தாவது வர்த்தக நாளாகஏற்றத்துடன் முடிவடைந்தது.
கடந்த சில நாட்களில் பங்குச் சந்தைகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதால், முதலீட்டாளர்கள் அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொள்வதில் சிறிய எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுகின்றனர். உலகளாவிய சந்தை போக்கும், பணவீக்க தரவுகளுமே இந்திய சந்தைகளின் அடுத்தகட்டநகர்வுகளை தீர்மானிக்கும்
உலக சந்தைகள்
திங்களன்று அமெரிக்க சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, தென்கொரியாவின் கோஸ்பி உயர்வுடனும்; சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., ஹாங்காங்கின் ஹாங்சேங்குறியீடுகள் சரிவுடனும் முடிவடைந்தன; ஐரோப்பிய சந்தைகள் கலவையாக வர்த்தகமாகின.
சென்செக்ஸ் சரிவுக்கு காரணங்கள்
1வங்கி, எரிசக்தி துறை பங்குகள்அதிகளவு விற்பனை
2 முதலீட்டாளர்களின் எச்சரிக்கை உணர்வு
உயர்வு கண்ட பங்குகள் - நிப்டி (%)
கிராசிம் 3.66%
டெக் மஹிந்திரா 2.14%
டாக்டர் ரெட்டீஸ் 2.10%
டாடா மோட்டார்ஸ் 2.08%
அதானி என்டர்பிரைசஸ் 1.39%
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 2,302 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை, நேற்று 1 பேரலுக்கு 0.30 சதவீதம் அதிகரித்து, 66.67 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா அதிகரித்து, 85.57 ரூபாயாக இருந்தது.