தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : ஜூன் 26, 2025 11:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2025 11:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு


வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று நிப்டி, சென்செக்ஸ் ஏற்றத்துடன் நிறைவு செய்தன. மத்திய கிழக்கில் அமைதி திரும்பியதை தொடர்ந்து, உலகளாவிய சந்தை போக்குகளில் சாதகமான சூழல் நிலவுகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் வர்த்தகம் துவங்கிய போதே, இந்திய சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின.

மீண்டும் அன்னிய முதலீடுகள், அதிகளவில் குவிய துவங்கியதுடன், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு எழுச்சி, முன்னணிநிறுவனங்களின் பங்குகளை வாங்க

முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியது ஆகிய காரணங்களால், நிப்டி, சென்செக்ஸ் தலா 1 சதவீதத்துக்கு மேல் உயர்வு கண்டன. தொடர்ச்சியாகமூன்றாவது நாளாக சந்தை குறியீடுகள் உயர்வுடன் நிறைவடைந்தன.

உலக சந்தைகள்


புதனன்று அமெரிக்க சந்தைகள் கலவையாக முடிவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி குறியீடு லேசான உயர்வுடனும்; தென்கொரியாவின் கோஸ்பி, ஹாங்காங்கின் ஹாங்சேங், சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன. ஐரோப்பியசந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகின.

உயர்வுக்கு காரணங்கள்

1உலகளவில் புவிசார் அரசியல் பதற்றம் குறைந்ததன் தாக்கம்

2முன்னணி நிறுவன பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம்

3அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்ந்து வருவது.

அன்னிய முதலீடு


அன்னிய முதலீட்டாளர்கள் 12,594 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.

கச்சா எண்ணெய்


உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.18 சதவீதம் அதிகரித்து, 67.80 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 36 பைசா அதிகரித்து, 85.72 ரூபாயாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us