தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : ஜூன் 28, 2025 12:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2025 12:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உயர்வுடன் நிறைவடைந்த வாரம்


வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று நிப்டி, சென்செக்ஸ் உயர்வுடன் நிறைவு செய்தன. மீண்டும் அன்னிய முதலீடுகள் அதிகளவில் வர துவங்கி இருப்பதன் காரணமாக வர்த்தகம் துவங்கிய போதே, இந்திய சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சீரானது,

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு எழுச்சி, முன்னணி நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியது, ரெப்போ வட்டியை குறைக்கவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது ஆகிய சாதகமான அம்சங்களால், நாள் முழுதும் சந்தை குறியீடுகள் உயர்வுடன் வர்த்தகமாகின. தொடர்ச்சியாக, நான்காவது நாளாக நிப்டி, சென்செக்ஸ் உயர்வுடன் நிறைவடைந்தன.

உலக சந்தைகள்


வியாழனன்று அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி குறியீடு மட்டும் உயர்வுடனும்; தென்கொரியாவின் கோஸ்பி, ஹாங்காங்கின் ஹாங்சேங், சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.

உயர்வுக்கு காரணங்கள்


1மீண்டும் அன்னிய முதலீடுகள் அதிகளவில் குவிய துவங்கின

2அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்ந்து வருவது

3முன்னணி நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியது

அன்னிய முதலீடு


அன்னிய முதலீட்டாளர்கள் 1,397 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.

கச்சா எண்ணெய்


உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.72 சதவீதம் அதிகரித்து, 68.20 அமெரிக்க டாலராக இருந்தது

ரூபாய் மதிப்பு


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 பைசா அதிகரித்து, 85.50 ரூபாயாக இருந்தது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us