
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்கு சந்தை கடந்த வாரம் இறங்குமுகத்துடன் முடிந்தது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக இறங்குமுகம் கண்ட நிலையில், வார இறுதி வர்த்தக நிறைவில் வியாழன் அன்று (வெள்ளி விடுமுறை) மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 201 புள்ளிகள் குறைந்து, 73,829 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 73 புள்ளிகள் குறைந்து, 22,397 புள்ளிகளாக இருந்தது.
ரியலாட்டி, ஐ.டி., மற்றும் ஆட்டோமொபைல் துறை பங்குகள் இறங்குமுகம் கண்டன. சர்வதேச சந்தை போக்கு தாக்கம் செலுத்தியது. வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர்.