
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்கு சந்தை கடந்த வாரம் ஏறுமுகத்துடன் முடிந்தது. வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 1,310 புள்ளிகள் உயர்ந்து, 75,157 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 429 புள்ளிகள் உயர்ந்து, 22,829 புள்ளிகளாக இருந்தது. இந்தியா மீது அமெரிக்கா விதித்த வர்த்தக வரி, 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தது, சந்தையில் தாக்கம் செலுத்தியது.
எனினும், அமெரிக்கா -- சீனா இடையிலான வர்த்தக மோதல் அச்சம், சர்வதேச சந்தையில் தாக்கம் செலுத்தியது. வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர்.

