உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 20, 2025 06:58 PM

அ நிறம் | அளவு
இந்திய பங்கு சந்தை கடந்த வாரம் ஏறுமுகத்துடன் முடிந்தது. வார இறுதி வர்த்தக நிறைவில் வியாழன் அன்று (வெள்ளிக்கிழமை விடுமுறை) மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 1,509 புள்ளிகள் உயர்ந்து, 78,553 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 415 புள்ளிகள் உயர்ந்து, 23,852 புள்ளிகளாக இருந்தது. நிகர அடிப்படையிலும் குறியீடுகள் ஏறுமுகம் கண்டன.
அமெரிக்க வரி விலக்குகள் மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தை முன்னேற்றம் உள்ளிட்ட அம்சங்கள் சந்தையில் தாக்கம் செலுத்தின. நிதி மற்றும் வங்கி துறை பங்குகள் உயர்ந்தன. வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.
