தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/பங்கு சந்தைகள் ஸ்திரத்தன்மையுடன் இயங்கி வருகின்றன: நிதியமைச்சர்

பங்கு சந்தைகள் ஸ்திரத்தன்மையுடன் இயங்கி வருகின்றன: நிதியமைச்சர்

பங்கு சந்தைகள் ஸ்திரத்தன்மையுடன் இயங்கி வருகின்றன: நிதியமைச்சர்


ADDED : மார் 15, 2024 09:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2024 09:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:உலகளவில் பங்குச் சந்தைகளில் பெரிய அளவிலான ஏற்ற இறக்கங்கள் காணப்படும் நிலையிலும், இந்திய பங்குச் சந்தைகள், குறிப்பிட்ட அளவு ஸ்திரத்தன்மையுடனே இயங்கி வருவதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.

மேலும், பங்குச் சந்தைகளை அவற்றின் போக்கிலேயே செயல்பட விட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் 'செபி' தலைவர் மாதபி புரி புச், சிறு மற்றும் நடுத்தர முதலீட்டுப் பிரிவில் மோசடியான விலை ஏற்ற இறக்கங்கள் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், இதுதொடர்பாக, செபி ஆலோசனை அறிக்கை வெளியிட திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்திருந்த நிலையில், தற்போது நிதியமைச்சர் இவ்வாறு தெரிவித்துஉள்ளார்.

நம்பிக்கை


இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

உலகளவில் பங்குச் சந்தைகள் பெரிய அளவிலான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்ற போதிலும், இந்திய பங்குச் சந்தைகள் குறிப்பிட்ட அளவு ஸ்திரத்தன்மை யுடனேயே இயங்கி வருகின்றன.

இந்நிலையில், நாம் சந்தைகளை அவற்றின் விருப்பப்படியே இயங்க அனுமதிக்க வேண்டும். நாட்டின் பங்குச் சந்தைகள் மிகப்பெரிய அளவில் ஏற்றத்தையோ, இறக்கத்தையோ சந்திக்காததால், எனக்கு அவற்றின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது.

கிரிப்டோ சொத்துக்களை பொறுத்தவரை, அவற்றை நாணயங்களாக பயன்படுத்த முடியாது என்பதே அரசின் நிலைப்பாடு.

அரசு மற்றும் ரிசர்வ் வங்கியால் மட்டுமே நாணயங்களை வெளியிட முடியும்.

கிரிப்டோ சொத்துக்கள் தொழில்நுட்பம் சார்ந்து இயங்குவதால், அவை எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். இது தொடர்பான விரிவான ஒழுங்குமுறை கட்டமைப்பு, ஜி20 கூட்டமைப்பு அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

கட்டமைப்பு


கிரிப்டோ சொத்துக்களை, ஒரு சில நாடுகள் ஒழுங்குமுறைப்படுத்தி, மற்ற பிற நாடுகள் ஒழுங்குமுறைப்படுத்தாத பட்சத்தில், அவை தீவிரவாதம் உள்ளிட்ட தவறான செயல்களுக்காக பயன்படுத்தப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே, இதனை ஒழுங்குபடுத்துவதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இதுதொடர்பாக ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us