/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பஞ்சுக்கு வரி விலக்கு எதிரொலி இறக்குமதி 3 மடங்காக வாய்ப்பு
/
பஞ்சுக்கு வரி விலக்கு எதிரொலி இறக்குமதி 3 மடங்காக வாய்ப்பு
பஞ்சுக்கு வரி விலக்கு எதிரொலி இறக்குமதி 3 மடங்காக வாய்ப்பு
பஞ்சுக்கு வரி விலக்கு எதிரொலி இறக்குமதி 3 மடங்காக வாய்ப்பு
ADDED : செப் 14, 2025 01:12 AM

திருப்பூர்:இறக்குமதி வரிச் சலுகையால், நடப்பு பருத்தி ஆண்டில், 41 லட்சம் பேல் பஞ்சு இறக்குமதியாகும் என்றும், பஞ்சு ஏற்றுமதி 10.36 சதவீதம் குறையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு பருத்தி சீசனில், கடந்த 31ம் தேதி வரை, 308 லட்சம் பேல் பஞ்சு (ஒரு பேல் 170 கிலோ) விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த பருத்தியாண்டில் (2023 அக்., - 24 செப்.,)ல், 15.20 லட்சம் பேல் பஞ்சு இறக்குமதி செய்யப்பட்டிருந்தது; இது, நடப்பு ஆண்டில், 41 லட்சம் பேல்களாக இருக்குமென கணக்கிடப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட, 28 லட்சம் பேல்களில், 18 லட்சம் பேல் மட்டுமே ஏற்றுமதியாகும் என்றும் கணக்கீடு செய்துள்ளனர். பருத்தி இறக்குமதிக்கான வரி, 11 சதவீதம் டிச., 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, புதிய பருத்தி ஆண்டு துவங்கியதும், இருப்பு வைத்துள்ள பஞ்சு, அதிக அளவு விற்பனைக்கு வரவும் வாய்ப்புள்ளது. இதனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பஞ்சு கையிருப்பு அதிகரிக்கும். இந்திய பருத்தி கழகம் மற்றும் தொழில் கூட்டமைப்புகள், அதிக அளவு வாங்கி, இருப்பு வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் (டாஸ்மா) தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், ''புதிய பருத்தியாண்டு (2025 அக்., - 2026 செப்.,) அக்., 1ம் தேதி துவங்குகிறது. இறக்குமதி வரி விலக்கால், பஞ்சு இறக்குமதி, டிச., மாதம் வரை அதிகரிக்கும்.
இதன் காரணமாக, பருத்தியாண்டின் துவக்கத்தில் இருந்தே, பருத்தி வரத்து அதிகரிக்கும். ஒரு கேண்டி (356 கிலோ), 55,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சீசன் துவங்கியதும், விலை குறையும் என்ற அச்சத்தால், விவசாயிகள் இருப்பு வைக்க விரும்பமாட்டார்கள்,'' என்றார்.
பருத்தி இறக்குமதிக்கான வரி, 11 சதவீதம் டிச., 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது
பஞ்சு இறக்குமதி, 15.20 லட்சம் பேல்களில் இருந்து நடப்பு ஆண்டில், 41 லட்சம் பேல்களாக உயரும் என கணிப்பு