டெக்னிக்கல் அனாலிசிஸ்: குறுகிய எல்லைக்குள் இறக்கத்துடன் வர்த்தகமாக வாய்ப்பு
டெக்னிக்கல் அனாலிசிஸ்: குறுகிய எல்லைக்குள் இறக்கத்துடன் வர்த்தகமாக வாய்ப்பு
UPDATED : ஆக 14, 2026 02:52 AM
ADDED : ஆக 14, 2026 02:27 AM

நேற்று 4 புள்ளிகள் இறக்கத்துடன் தொடங்கிய நிப்டி பின்னர் குறைய ஆரம்பித்து 124 வரை இறங்கியது. பின்னர், நாளின் இறுதியில் 40 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ல் 11 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 7 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.29 சதவீத உயர்வுடனும், 'நிப்டி 100' குறியீடு அதிகபட்சமாக 0.14 சதவீத சரிவுடனும் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 12 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 9 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி கெமிக்கல்ஸ்' குறியீடு அதிகபட்சமாக 1.25 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 1.05 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,498 நிறுவனங்களின் பங்குகளில் 1,688 ஏற்றத்துடனும்; 1,698 இறக்கத்துடனும்; 112 மாற்றம் ஏதும் இல்லாமலும் முடிவடைந்திருந்தன.
'நிப்டி 200' நாள் சராசரிக்கு (இ.எம்.ஏ.,) சற்று மேலே முடிந்துள்ளது. குறுகிய கால டெக்னிக்கல் சூழல் நிப்டி பெரிய மாற்றமின்றி பக்கவாட்டில் நகரவோ அல்லது சற்று இறக்கம் காணவோ வாய்ப்புள்ளதாக காட்டுகிறது.
![]() |
ஆர்.எஸ்.ஐ., (53.33) என்ற அளவில் இருப்பது மாற்றம் இல்லாத அல்லது சிறிய அளவிலான ஏற்றம் வருவதற்கு வாய்ப்புள்ளது என்பதை உணர்த்துகின்ற போதிலும் எம்.ஏ.சி.டி., (121.74) சிக்னல் லைனுக்கு (126.50) சற்று கீழே இருப்பதும் ஸ்டோக்காஸ்ட்டிக் (31.36) பலவீனமாக இருப்பதும் குறுகிய காலத்தில் ஏற்றத்திற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதையே காட்டுகின்றன.
நிப்டிக்கு 24,350ல் உடனடி சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. இதை தாண்டினால் 24,180 வரை செல்ல வாய்ப்புள்ளது. 24,420ல் உடனடி ரெசிஸ்டென்ஸ் உள்ளது. இதைத்தாண்டி மேலே போனால் 24,520 வரை செல்லக்கூடும். மொத்தத்தில் குறுகிய எல்லைகளுக்குள் இறக்கத்துடன் வர்த்தகமாக வாய்ப்புள்ளது என்பதையே டெக்னிக்கல்கள் காட்டுகின்றன.

