/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
செப்டம்பரில் நாட்டின் ஏற்றுமதி சிறிதளவு அதிகரித்தது
/
செப்டம்பரில் நாட்டின் ஏற்றுமதி சிறிதளவு அதிகரித்தது
செப்டம்பரில் நாட்டின் ஏற்றுமதி சிறிதளவு அதிகரித்தது
செப்டம்பரில் நாட்டின் ஏற்றுமதி சிறிதளவு அதிகரித்தது
ADDED : அக் 16, 2024 10:52 PM

புதுடில்லி:கடந்த செப்டம்பர் மாதத்தில், இந்தியாவின் ஏற்றுமதி, சற்று அதிகரித்து, கிட்டத்தட்ட 2.87 லட்சம் கோடி ரூபாயாக பதிவாகி உள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில், 2.86 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்து மத்திய அரசு தெரிவித்துஉள்ளதாவது:
கடந்த செப்டம்பர் மாதத்தில், நாட்டின் இறக்குமதி மதிப்பு 1.60 சதவீதம் அதிகரித்து, 4.59 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
கடந்தாண்டு இதே காலத்தில், இறக்குமதி மதிப்பு 4.52 லட்சம் கோடி ரூபாயாக பதிவாகி இருந்தது. வர்த்தக பற்றாக்குறை 1.72 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி, கடந்த ஆகஸ்ட் மாதம், முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 9.30 சதவீதம் குறைந்து இருந்தது. நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், ஏற்றுமதி ஒரு சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 17.70 லட்சம் கோடி ரூபாயாகவும்; இறக்குமதி 6.16 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 29.10 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.