/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
வீட்டுக்கு மட்டுமல்ல விலை; பொது இடத்துக்கும் 40% வசூல் பெருநகர குடியிருப்புகளின் இன்றைய நிலை

ADDED : ஜூன் 10, 2025 06:59 AM

புதுடில்லி : பெருநகர அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோர், தாங்கள் செலுத்தும் மொத்த தொகையில் 60 சதவீதம் வரை மட்டுமே வசிப்பிடமாக பெறும் நிலை அதிகரித்து வருகிறது.
சென்னை உட்பட நாட்டின் பெருநகரங்களில் வானுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகி வருகின்றன. வேலைக்கு செல்வோரும், தொழில் புரிவோரும் அதிகரித்துள்ளதால், நகரங்களில் இத்தகைய குடியிருப்புகளில் வீடுகள் தேவை உயர்ந்து வருகிறது.
அடுக்குமாடி குடியிருப்பு வீடு வாங்கும்போது, அதற்கு செலுத்தும் தொகையில் 60 சதவீதம் மட்டுமே வீட்டுக்குள் வசிப்பிடமாக கிடைக்கிறது; மீதி 40 சதவீதம் வரை பொது பயன்பாட்டு வசதிகளுக்கான விலையாக அமைவதாக, கட்டுமான ஆய்வு நிறுவனம் அனராக் தெரிவிக்கிறது.
சென்னை, பெங்களூரு, டில்லி, மும்பை, புனே, ஹைதராபாத், கொல்கட்டா ஆகிய ஏழு பெருநகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், வீடு வாங்குவோர் செலுத்தும் தொகையில் 40 சதவீதம், அவர் நேரடியாக பயன்படுத்தக் கூடியதாக அல்லாத பகுதிகளுக்கும் சேர்த்து செலுத்த வேண்டியிருப்பது தெரிய வந்தது.
இதில், மும்பை 49 சதவீதத்துடன் முதலிடத்திலும், சென்னை 36 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளன.
கிராப் 1
7 நகரங்களில் நிலை
டில்லி மும்பை பெங்களூரு புனே ஹைதராபாத் சென்னை கொல்கட்டா
டேபிள் 1
நகரம் 2019 2022 2025 ஜன., - மார்ச்
டில்லி 31 37 41
மும்பை 33 39 49
பெங்களூரு 30 35 41
புனே 32 36 40
ஹைதராபாத் 30 33 38
சென்னை 30 32 36
கொல்கட்டா 30 35 39
சராசரி 31 35 40