/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
இரண்டாவது நாளாக தொடர்ந்த சரிவு
/
இரண்டாவது நாளாக தொடர்ந்த சரிவு
ADDED : அக் 16, 2024 11:36 PM

• உலகளாவிய சந்தைகள் வீழ்ச்சி, தகவல் தொழில்நுட்பம், வாகனத்துறை பங்குகளை விற்று, அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறியது போன்றவற்றால், வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளாக நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள், சரிவுடன் முடிவடைந்தன
• நேற்றைய வர்த்தகத்தின் போது, நிப்டி 0.59 சதவீதம் சரிந்து 24,908 புள்ளிகள்; சென்செக்ஸ் 0.56 சதவீதம் சரிந்து 81,358.26 புள்ளிகள் என கீழே சென்றன. சந்தை குறியீடுகள், இரண்டாவது நாளாக வீழ்ச்சியுடன் நிறைவு செய்தன
• நிப்டி குறியீட்டை பொறுத்தவரை, ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் எரிவாயு தவிர, அனைத்து துறை பங்குகளும் இறக்கத்தை சந்தித்தன. சென்செக்ஸ் குறியீட்டில், தகவல் தொழில்நுட்பம், வாகனத்துறை சார்ந்த பங்குகள் அதிக இறக்கத்தை கண்டன
• நடப்பு நிதியாண்டின் நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி குறைவாக இருக்கும் என்ற மதிப்பீடு காரணமாக, உள்ளூர் முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் வர்த்தகத்தை மேற்கொள்வதால், இறக்கம் தொடர்வதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 3,436 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை
விற்பனை செய்திருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.08 சதவீதம் உயர்ந்து, 74.32 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 பைசா அதிகரித்து, 84.02 ரூபாயாக இருந்தது.
டாப் 5 நிப்டி 50 பங்குகள்
அதிக ஏற்றம் கண்டவை
எச்.டி.எப்.சி., லைப்
டாக்டர் ரெட்டீஸ் லேப்
கிராசிம்
எச்.டி.எப்.சி., வங்கி
பஜாஜ் ஆட்டோ
அதிக இறக்கம் கண்டவை
டிரென்ட்
மஹிந்திரா & மஹிந்திரா
இன்போசிஸ்
ஹீரோ மோட்டோகார்ப்
அதானி போர்ட்ஸ்