ADDED : ஆக 05, 2025 12:36 AM
9 கடந்த ஜூன் மாதத்தில், இந்தியாவின் தேயிலை உற்பத்தி, முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், 9 சதவீதம் குறைந்து 13.35 கோடி கிலோவாக உள்ளது. இது கடந்த 2024 ஜூனில், 14.67 கோடி கிலோவாக இருந்ததாக, தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.
66,000
எல்.ஐ.சி.,யின் பங்குகள் மதிப்பு கடந்த மாதம் 66,000 கோடி ரூபாய் சரிவு கண்டது. கடந்த ஜூன் மாத இறுதியில், 15.94 லட்சம் கோடி ரூபாயாக இருந்த எல்.ஐ.சி.,யின் மிகப்பெரிய பங்கு மதிப்பு, ஜூலையில் 4.15 சதவீதம் குறைந்து 15.28 லட்சம் கோடியாக சரிவை சந்தித்தது.
3,600
ஜே.எஸ்.டபிள்யூ., சிமென்ட் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 3,600 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது. இதற்காக, பங்கு ஒன்றின் விலையை 139 முதல் 147 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பங்கு விற்பனை வருகிற 7ம் தேதி துவங்கி, 11ம் தேதி முடிவடைய உள்ளது.

