/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பிப்ரவரியில் கைமாறிய கம்பெனிகள் 3 ஆண்டுகளில் இல்லாத அதிகரிப்பு
/
பிப்ரவரியில் கைமாறிய கம்பெனிகள் 3 ஆண்டுகளில் இல்லாத அதிகரிப்பு
பிப்ரவரியில் கைமாறிய கம்பெனிகள் 3 ஆண்டுகளில் இல்லாத அதிகரிப்பு
பிப்ரவரியில் கைமாறிய கம்பெனிகள் 3 ஆண்டுகளில் இல்லாத அதிகரிப்பு
ADDED : மார் 15, 2025 10:31 PM

புதுடில்லி:இந்தியாவில் கடந்த மாதம் 62,640 கோடி ரூபாய்க்கு இணைப்பு, கையகப்படுத்துதல் மற்றும் தனியார் பங்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, 'கிராண்ட் தோர்ன்டன் பாரத்' நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மாதம் இந்தியாவில் 41,760 கோடி ரூபாய் மதிப்பிலான இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், 20,880 கோடி ரூபாய்க்கு தனியார் பங்கு ஒப்பந்தங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. மொத்தமாக, 62,640 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவே அதிகபட்சஒப்பந்த மதிப்பாகும். நிச்சயமற்ற உலக பொருளாதார சூழல், வர்த்தக போர் குறித்த அச்சம், இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து தொடர்ந்து வெளியேறும் அன்னிய முதலீட்டாளர்கள் என சவாலான சூழல் நிலவி வரும் நிலையில், வலுவான உள்நாட்டு தேவையின் காரணமாக நாட்டின் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் சந்தை வலுவாகவே உள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.