24,803 புள்ளிகளுக்கு மேல் சென்றால் ஏற்றம் தொடரும்
24,803 புள்ளிகளுக்கு மேல் சென்றால் ஏற்றம் தொடரும்
UPDATED : செப் 09, 2025 03:41 AM
ADDED : செப் 09, 2025 03:38 AM

நிப்டி
நேற்றைய வர்த்தகத்தில், 24802- புளிகளில் ஏற்றத்துடன் துவங்கிய நிப்டி, தொடர்ந்து 2.30 மணி வரை ஏறுமுகத்திலேயே (24885) இருந்துவந்தது. அதன் பின்னால் திடீர் இறக்கத்தை சந்தித்து, நாளின் இறுதியில் 32 புள்ளிகள் ஏற்றத்துடன் 24773 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிப்டியின் எம்ஏசிடி டைவர்ஜன்ஸ் (9):12.96 ஆகவும்; ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,):-1.11 ஆகவும் இருப்பது ஏற்ற இறக்கங்கள் அதிகமாக உருவாக வாய்ப்புள்ளது என்பதை காட்டுவதாக இருக்கிறது. 24803 என்ற எல்லைக்கு மேலே தொடர்ந்து வர்த்தகம் நடந்தால் மட்டுமே ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது. தற்போதைய டெக்னிக்கல் அமைப்பின் படி நிப்டி 24720, 24670 மற்றும் 24615 என்ற நிலைகளை ஆதரவு நிலைகளாகக் கொண்டும், 24855, 24940 மற்றும் 24990 என்ற எல்லைகளை தடுப்பு நிலைகளாகக் கொண்டும் செயல்படலாம்.
![]() |
![]() |
நிப்டி பேங்க்
![]() |
![]() |
பொறுப்பு துறப்பு: பங்குச் சந்தையில் செய்யும் முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன்னால் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். முதலீடு செய்யும் முன்னால், செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரை கலந்தாலோசித்து, அவற்றில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்த அளவில் இருக்கிறதா என்பதை தெரிந்து மேற்கொள்ளவும். மேலே தரப்பட்டுள்ள விவரங்கள் சரியானவைதானா என்றும் அவற்றின் உண்மைத்தன்மை குறித்தும் சரிபார்த்துக்கொள்வது வாசகர்/முதலீட்டாளரின் முழுப்பொறுப்பாகும். இதில் தவறுகள் ஏதும் இருந்தாலோ / இதனை நம்பி செயல்பட்டு வரக்கூடிய எந்த விதமான நஷ்டத்துக்கோ தினமலர் நாளிதழோ அல்லது அதைச் சார்ந்த நபர்களோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பங்கு விலை/வால்யூம் குறித்த தகவல்கள் www.nseindia.com இணையதளத்தில் இருந்து திரட்டப்பட்ட நாள்: செப்டம்பர் 8, 2025.