ADDED : செப் 09, 2025 03:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, என்ரிச் மனி நிறுவனம், எஸ்.ஐ.பி., எனும் சீரான முதலீட்டு முறையில் 10 ரூபாயில் இருந்து முதலீடு செய்யும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
சென்னையில் கார்ப்பரேட் அலுவலகம் கொண்டுள்ள இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:
மியூச்சுவல் பண்டு எஸ்.ஐ.பி., திட்டத்தில், 12 மாதத்துக்குள், சிறிய நகரங்களைச் சேர்ந்த 10 லட்சம் பேரை சேர்ப்பதில் கவனம் செலுத்த உள்ளது.
ஓ.என்.டி.சி., நெட்வொர்க், சொத்து மேலாண்மை நிறுவனத்துக்கும், வினியோகஸ்தர்களுக்கும் இடையே நிலையான இணைப்பு பாலமாக செயல்படும்.
இத்திட்டத்தில் கல்லுாரி மாணவர்கள், கிக் பணியாளர்கள், கிராம மக்கள் பங்கேற்பர் என ஆவலுடன் காத்திருக்கிறோம். 100 சதவீத டிஜிட்டல் முறையில் ஆதார், பான் எண் வாயிலாக எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்யலாம்.

