என் மகன் பெயர் ஜீசஸ்; கிறிஸ்துமஸ் விழாவில் ஆற்காடு இளவரசர் பேச்சு
என் மகன் பெயர் ஜீசஸ்; கிறிஸ்துமஸ் விழாவில் ஆற்காடு இளவரசர் பேச்சு
UPDATED : டிச 22, 2025 06:27 PM
ADDED : டிச 22, 2025 02:48 PM

சென்னை: ''என் மகன் பெயர் ஜீசஸ். இயேசு கிறிஸ்து மீது நம்பிக்கை வைக்காவிட்டால், நான் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது,'' என்று செங்கல்பட்டில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், ஆற்காடு இளவரசரின் மகன் நவாப் ஜாதா முகமது ஆசிப் அலி பேசினார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தவெக சார்பில் நடந்த சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடந்தது.
இதில் நடிகர் விஜய் முன்னிலையில், ஆற்காடு இளவரசரின் மகனும், திவானுமான நவாப் ஜாதா முகமது ஆசிப் பேசியதாவது: வணக்கம். நான் முஸ்லிம் மதத்தை பின்பற்றுகிறேன். ஆனால் எனது மகன் பெயர் ஜீசஸ். மூத்த மகன் பெயர் ஆப்ரகாம்.
நாங்களும் மேன்மை தாங்கிய இயேசு கிறிஸ்து, அன்னை மேரி மீது நம்பிக்கை வைத்து இருக்கிறோம். அப்படி இல்லையெனில் நாங்கள் முஸ்லிமே அல்ல. நான் இயேசு கிறிஸ்துவை நம்பவில்லை எனில் நான் முஸ்லிமே கிடையாது. நான் இயேசு கிறிஸ்து மீது நம்பிக்கை வைக்க வேண்டும்; அது தான் என்னை உண்மையான முஸ்லிம் ஆக்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்

