தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ துாரத்து இடி முழக்கம்

துாரத்து இடி முழக்கம்

துாரத்து இடி முழக்கம்


ADDED : நவ 21, 2024 10:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2024 10:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

• நேற்றைய வர்த்தகத்தில் பங்கு சந்தை குறியீடுகள், கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத வகையில் சரிந்தன

• லஞ்சம் மற்றும் மோசடி வழக்கில், கவுதம் அதானிக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்ததை அடுத்து, அதானி குழும நிறுவன பங்குகள் கடும் சரிவை கண்டன

• அதானி குழும நிறுவன பங்குகள் சரிவுடன், அன்னிய முதலீடுகள் வெளியேறுவது, ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் மந்தமான போக்கு ஆகியவையும் சேர்ந்து கொண்டதும், சரிவுக்கு மேலும் வழிவகுத்தது

• நேற்றைய வர்த்தகத்தில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு மொத்தம் 5.27 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது

• மும்பை பங்கு சந்தையில் இடம்பெற்றுள்ள 21 துறை குறியீடுகளில், 16 துறைகள் சரிவை கண்டன; ஐந்து துறைகள் ஏற்றம் கண்டன. ரியல் எஸ்டேட் துறை அதிக ஏற்றத்தையும்; சேவைகள் துறை அதிக இறக்கத்தையும் கண்டன.

அன்னிய முதலீடு


அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று ---5,321 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.

கச்சா எண்ணெய்


உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.13 சதவீதம் அதிகரித்து, 73.71 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 8 ----பைசா சரிந்து, 84.50 -----ரூபாயாக இதுவரை இல்லாத அளவில் சரிவை கண்டது.

டாப் 5 நிப்டி 50 பங்குகள்



அதிக ஏற்றம் கண்டவை

 பவர்கிரிட்

 அல்ட்ராசெம்

 ஹிண்டால்கோ

 அப்பல்லோ ஹாஸ்பிட்டல்

 கிராசிம்

அதிக இறக்கம் கண்டவை

 அதானி எண்டர்பிரைசஸ்

 அதானி போர்ட்ஸ்

 எஸ்.பி.ஐ., லைப்

 எஸ்.பி.ஐ.,

 என்.டி.பி.சி.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us