/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
அமெரிக்கா - சீனா இடையே சூடுபிடிக்கும் வர்த்தக போர்
/
அமெரிக்கா - சீனா இடையே சூடுபிடிக்கும் வர்த்தக போர்
அமெரிக்கா - சீனா இடையே சூடுபிடிக்கும் வர்த்தக போர்
அமெரிக்கா - சீனா இடையே சூடுபிடிக்கும் வர்த்தக போர்
ADDED : பிப் 04, 2025 10:36 PM

பெய்ஜிங்:அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் சூடுபிடித்து வருகிறது. சீனப் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதற்கு பதிலடி தரும் வகையில், சீனாவில் இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில அமெரிக்க பொருட்களுக்கு 15 சதவீதம் வரை வரி விதிப்பதாக, சீன அதிபர் ஷி ஜின்பிங் அதிரடியாக அறிவித்துள்ளார்.
சமீபத்தில் மெக்சிகோ, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதமும்; சீனப் பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் கனடாவும், மெக்சிகோவும் அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 25 சதவீதம் வரை வரி விதிப்பதாக அறிவித்தன. இதனால், அதிர்ந்து போன டிரம்ப், வரியை ஒரு மாதம் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
எனினும், சீனாவுக்கு விதிக்கப்பட்ட 10 சதவீத வரி குறித்து டிரம்ப் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், குறிப்பிட்ட சில அமெரிக்க பொருட்களை சீனாவுக்குள் இறக்குமதி செய்ய 10 முதல் 15 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாக, சீன அரசு நேற்று அறிவித்தது. சீனாவுக்கு டிரம்ப் விதித்த வரி, நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில், இதுவரை சீன அதிபருடன் டிரம்ப் பேசவில்லை என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் உறுதி செய்தார்.