தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ஆப்பிள் நிறுவனத்துக்கு புதிய சி.இ.ஓ., நிர்வாக தலைவராகிறார் டிம் குக்

ஆப்பிள் நிறுவனத்துக்கு புதிய சி.இ.ஓ., நிர்வாக தலைவராகிறார் டிம் குக்

ஆப்பிள் நிறுவனத்துக்கு புதிய சி.இ.ஓ., நிர்வாக தலைவராகிறார் டிம் குக்


UPDATED : ஏப் 22, 2026 07:42 AM

ADDED : ஏப் 22, 2026 04:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 22, 2026 07:42 AM ADDED : ஏப் 22, 2026 04:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கலிபோர்னியா, தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் தற்போதைய தலைமை செயல் அதிகாரி டிம் குக், நிறுவனத்தின் நிர்வாக தலைவராக பொறுப்பேற்க உள்ளார். தலைமை செயல் அதிகாரியாக ஜான் டர்னஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஆப்பிள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆப்பிளில் 2001ம் ஆண்டு சேர்ந்த ஜான் டர்னஸ், நீண்டகாலமாக ஹார்ட்வேர் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 'மேக்' கணினிகள் உள்ளிட்ட பல தயாரிப்புகளின் விற்பனையை உயர்த்தியதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

சமீபத்தில் புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தியதிலும் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது.

நிறுவனங்கள் ஏ.ஐ., தொழில்நுட்பத்துக்கு மாறுவது வேகமெடுத்துள்ள நிலையில், அந்த துறையில் ஆப்பிளை முன்னணிக்கு கொண்டு செல்வது டர்னஸின் முக்கிய சவாலாக இருக்கும்.

கடந்த 2011ம் ஆண்டு தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற டிம் குக் தலைமையில், ஆப்பிள் நிறுவன பங்குகள் 20 மடங்கு உயர்ந்தன. நஷ்டத்தில் இருந்த நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய பிராண்டாக மாற்றிய பெருமை டிம் குக்கையே சாரும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us