சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / வர்த்தக துளிகள் / வர்த்தக துளிகள்
/
செய்திகள்
பங்கு வர்த்தகம்
வர்த்தக துளிகள்
ADDED : மார் 19, 2025 11:39 PM
வோடபோன் நிறுவனம், இந்தியாவில் நேற்று முதல் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் ஏப்ரல் மாதத்துக்குள் டில்லி, பெங்களூரு உள்ளிட்ட ஐந்து நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வோடபோனின் பங்கு விலை நேற்று 5 சதவீதத்துக்கும் கூடுதலாக உயர்வு கண்டது. வர்த்தக நேர முடிவில், தேசிய பங்குச் சந்தையில், நிறுவனத் தின் பங்கு விலை 5.07 சதவீதம் உயர்ந்து, 7.46 ரூபாயாக இருந்தது.
பங்குச் சந்தை மோசடிகளை கண்டறிந்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் முதலீட்டாளர்களின் 1,083 கோடி ரூபாயை செபி மீட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2019 - 20 முதல் 2023 - 24 நிதியாண்டு வரை 6,717 பங்குச் சந்தை மோசடிகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்சைடர் டிரேடிங் மற்றும் சந்தைகளை ஏமாற்றும் நடைமுறைகளை உடனடியாக கண்டுபிடிக்கும் வகையில், நிறுவனங்களின் பங்கு பரிவர்த்தனைகளை செபி தொடர்ந்து கண்காணித்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
விவசாயம், சுகாதாரம், கல்வி, காலநிலை மாற்றம் ஆகிய துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த, மத்திய அரசின் இந்தியா ஏ.ஐ., மிஷன் அமைப்புக்கும், அமெரிக்காவின் கேட்ஸ் பவுண்டேஷனுக்கும் இடையே, விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதனிடையே, டில்லியில் பேசிய மைக்ரோசாப்ட் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ், இந்தியா செயற்கை நுண்ணறிவில் முக்கிய பங்காற்றும் என தெரிவித்தார்.
எர்ணாகுளத்தைச் சேர்ந்த 'ஐஹப் ரோபாட்டிக்ஸ்' எனும் மனித ரோபாட்டிக்ஸ் நிறுவனம், ஆரம்பகட்ட முதலீடாக அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து 4.30 கோடி ரூபாய் திரட்டியுள்ளது. இதைக்கொண்டு கேரள மாநிலத்தில் மிகப்பெரிய மனித ரோபாட்டிக்ஸ் தயாரிப்பு ஆலையை அமைக்க உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 150 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-24ம் நிதியாண்டில், வளைகுடா நாடுகளில் இருந்து அனுப்பிய தொகையைவிட, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் இருந்து வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாயகத்துக்கு அனுப்பிய தொகை அதிகம் என, ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் மொத்த எண்ணிக்கையில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளில் பாதிக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.