திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / வர்த்தக துளிகள் / வர்த்தக துளிகள்
/
செய்திகள்
பங்கு வர்த்தகம்
வர்த்தக துளிகள்
ADDED : மார் 31, 2025 01:11 AM
சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் 2025 - 26ம் ஆண்டுக்கான, தென் மண்டல தலைவராக கேரளாவின் முத்துாட் பாப்பச்சன் குழுமத்தின் தலைவரான தாமஸ் ஜான் முத்துாட் தேர்ந்தெடுக்கப்பட்டுஉள்ளார். டென்மார்க்கை தளமாகக் கொண்ட டாஸ்போசின் துணை நிறுவனமான டான்போஸ் இந்தியாவின் மண்டல தலைவரான ரவிச்சந்திரன் புருஷோத்தமன் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சி.ஐ.ஐ., தெரிவித்து உள்ளது.
இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த ஜனவரி மாதம் 1.23 சதவீதம் அதிகரித்து, 2.14 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 2.11 கோடி டன்னாக இருந்தது. மேலும் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஜனவரிக்கு இடையேயான காலகட்டத்தில் மொத்த இறக்குமதி 22.27 கோடி டன்னாக இருந்தது. போதுமான அளவில் உள்நாட்டு இருப்பு இருந்ததன் காரணமாக, இறக்குமதி குறைவாக இருந்தது. இந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 5.88 சதவீதம் அதிகரித்து 83.06 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 78.45 கோடி டன்னாக இருந்தது.
சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய முதலீட்டு நிறுவனமான 'டெமாசெக்'குக்கு, இந்தியாவின் பிரபலமான 'ஹல்திராம் ஸ்நாக்ஸ் புட்ஸ்' நிறுவனத்தின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக ஹல்திராம் அறிவித்துள்ளது-. விற்பனைக்குரிய பங்கு சதவீதம் குறித்த விபரங்களை இந்நிறுவனங்கள் வெளியிடவில்லை. இது இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பங்கு நுகர்வோர் ஒப்பந்தம் என கூறப்படுகிறது.
இண்டிகோ விமான நிறுவனத்தின் தாய் நிறுவனமான இன்டர்குளோப் ஏவியேஷனுக்கு, கடந்த 2021 - 2022 மதிப்பீட்டு ஆண்டுக்காக வருமான வரி துறையிடம் இருந்து 944.20 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மும்பை பங்குச் சந்தை தாக்கலில் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தவறான நடிவடிக்கை என்றும், இது குறித்து சட்ட நடிவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிறுவனம் மேலும் கூறியது.