/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'தொலைத்தொடர்பு சேவையில் 4 - 5 போட்டியாளர்கள் தேவை' மத்திய அமைச்சர் விருப்பம்

ADDED : ஜூலை 03, 2025 12:26 AM

புதுடில்லி:நாட்டின் தொலைத்தொடர்பு துறையில் நான்கு, ஐந்து நிறுவனங்கள் போட்டி போடுவதையே, மத்திய அரசு விரும்புவதாக மத்திய இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:
இந்தியாவின் தொலைதொடர்புத் துறையில், இரண்டு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருவதற்கு அரசின் கொள்கை முடிவுகள் காரணம் இல்லை. மாறாக சந்தை எதார்த்தங்களே இதை தீர்மானிக்கின்றன.
தொலைதொடர்பு துறையில் அதிக மூலதனம் தேவைப்படுவதால், இவற்றைக் கொண்டுள்ள நிறுவனங்கள் அதிக சந்தை பங்கை பெற்றுள்ளன. மூலதன செலவிடும் திறன் பெற்றுள்ளதால், ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் நாடு முழுதும் தங்களது சேவையை விரிவுபடுத்திஉள்ளன.
இவற்றால் தான் உலகிலேயே மிக வேகமாக 5ஜி சேவையை நம்மால் விரிவுபடுத்த முடிந்தது.
நாட்டில் நான்கு, ஐந்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சேவை வழங்குவதையே மத்திய அரசும் விரும்புகிறது.
இதனால் தான் கடனில் சிக்கித் தவிக்கும் வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்க வேண்டிய கடனில் 36,000 கோடி ரூபாயை, மத்திய அரசு பங்குகளாக மாற்றிக்கொண்டது.
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை மீட்டெடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது. எதிர்பார்த்ததை விட கூடுதல் காலம் ஆனாலும், தொலைத்தொடர்பு துறையில் வலுவான மாற்றாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு கூறினார்.