/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை இந்திய ஜவுளிக்கு இ காமர்ஸ் வாய்ப்பு
/
அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை இந்திய ஜவுளிக்கு இ காமர்ஸ் வாய்ப்பு
அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை இந்திய ஜவுளிக்கு இ காமர்ஸ் வாய்ப்பு
அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை இந்திய ஜவுளிக்கு இ காமர்ஸ் வாய்ப்பு
ADDED : பிப் 08, 2025 10:04 PM

கோவை:சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளால், 'இ - காமர்ஸ்' வாயிலாக, இந்திய ஜவுளித் துறையின் ஏற்றுமதிக்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதும் கனடா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது கூடுதலாக வர்த்தக வரி விதிப்புகளை அறிவித்துள்ளார். இதனால், இந்தியாவுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
சாதகம்
அமெரிக்காவில், 800 டாலர்களுக்கு குறைவான பார்சல்களில் இறக்குமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டில் இருந்து வழங்கப்படும் இந்தச் சலுகையை, சீனா நன்கு பயன்படுத்தி வந்தது.
ஆண்டுக்கு சுமார் 100 கோடி சிறு பார்சல்களை அமெரிக்காவுக்கு அனுப்பி, அமெரிக்க சந்தையில் முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தது.
தற்போது, இந்த சிறு பார்சல்களுக்கான வரி விலக்கை, சீனாவுக்கு அதிபர் டிரம்ப் ரத்து செய்துள்ளார். இது, இந்திய ஜவுளித்துறைக்கு சாதகமாகியுள்ளது.
இதுதொடர்பாக, இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:
சீனா, கடந்த ஆண்டு 23 பில்லியன் டாலர் அளவுக்கு அதாவது தற்போதைய மதிப்பில் கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, இ- - காமர்ஸ் வாயிலாக பல்வேறு பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. குறிப்பாக, வீட்டு ஜவுளிப் பொருட்கள், ஆயத்த ஆடைகள் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டது.
இந்நிலையில், சீனா மீது 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதுடன், சிறிய பார்சல்களுக்கான வரிச்சலுகையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது, இந்தியாவுக்கு சாதகம்.
இந்தியாவுக்கும் சீனாவுக்குமான அமெரிக்க இறக்குமதி வரியில் வித்தியாசம் இருக்கும். வழக்கமான ஏற்றுமதி முறையில் சீனாவைவிட நமக்கு 10 சதவீதமும், இ - காமர்ஸ் வாயிலான ஏற்றுமதிக்கு 35 சதவீதமும் குறைவாக இருக்கும்.
நல்ல வாய்ப்பு
ஓராண்டில் அமெரிக்கா வில் 6 லட்சம் கோடி ரூபாய்க்கும் கூடுதலான மதிப்பில், ஜவுளிகள் இ- - காமர்ஸ் வாயிலாக விற்பனையாகின்றன. எனவே, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இந்த மாற்றம் நல்ல வாய்ப்பாக அமையும்.
இந்த சிறப்பான வாய்ப்பைப் பயன்படுத்தி, ஆயத்த ஆடை மற்றும் வீட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள், அமெரிக்காவுக்கான இ - காமர்ஸ் சந்தையில் வளர முயற்சி செய்யலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
ஈரோடு, கரூர் மாவட்டங்களில் இருந்து 500 கோடி ரூபாய் அளவுக்கு இ - காமர்ஸ் முறையில் ஏற்றுமதி வர்த்தகம் நடைபெறுகிறது
அரசும் இ - காமர்ஸ் வாயிலான ஏற்றுமதியை அதிகரிக்க, மாவட்ட வாரியாக சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த உள்ளது
தொழில் அமைப்புகளும் இந்த ஏற்றுமதி வாய்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளன
அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைகளால் இந்திய ஜவுளி ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.