/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
வங்கி உத்தரவாதம் நீக்கம் வோடபோன் பங்கு உயர்வு
/
வங்கி உத்தரவாதம் நீக்கம் வோடபோன் பங்கு உயர்வு
ADDED : நவ 26, 2024 11:03 PM

'கடந்த 2022ம் ஆண்டு வரையிலான அலைக்கற்றை கொள்முதலுக்கு வங்கி உத்தரவாதம் தேவையில்லை' என்ற மத்திய அமைச்சரவையின் ஒப்புதலால், 'வோடபோன் ஐடியா' நிறுவனத்தின் பங்கு விலை உயர்ந்தது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அலைக்கற்றையை ஏலம் எடுப்பதற்கு, வங்கி உத்தரவாதம் தேவையில்லை என 2022ம் ஆண்டு, தொலைத்தொடர்புத் துறையின் பரிந்துரையை ஏற்று, விதிகளில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. எனினும், அதற்கு முந்தைய ஆண்டுகளில் எடுக்கப்பட்ட ஏலத்துக்கு, வங்கி உத்தரவாதத்தை வோடபோன் ஐடியா நிறுவனம் நிலுவை வைத்திருந்தது.
இதனால், அந்நிறுவனம் 24,700 கோடி ரூபாய்க்கு வங்கி உத்தரவாதம் வழங்க வேண்டியிருந்தது. தற்போது, 2022க்கு முன்பு அலைக்கற்றை ஏலம் எடுத்த நிறுவனங்களுக்கும் இந்த விதி பொருந்தும் என, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதனால், பங்குச் சந்தைகளில், வோடாபோன் ஐடியா நிறுவன பங்கு விலை, நேற்று கிட்டத்தட்ட 9 சதவீதம் உயர்ந்து, ஒரு பங்கின் விலை 7.59 ரூபாயானது.