/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
தங்கமும் இறங்குது, வெள்ளியும் இறங்குது பங்குச் சந்தையும் இறங்கினால் என்ன செய்யலாம்?
/
தங்கமும் இறங்குது, வெள்ளியும் இறங்குது பங்குச் சந்தையும் இறங்கினால் என்ன செய்யலாம்?
தங்கமும் இறங்குது, வெள்ளியும் இறங்குது பங்குச் சந்தையும் இறங்கினால் என்ன செய்யலாம்?
தங்கமும் இறங்குது, வெள்ளியும் இறங்குது பங்குச் சந்தையும் இறங்கினால் என்ன செய்யலாம்?
ADDED : அக் 23, 2025 12:22 AM

உச்சத்துக்கு போன தங்கம் விலை, இப்போது இறங்குகிறது. கூடவே வெள்ளி விலையும் இறங்குகிறது. இதோடு சேர்த்து சந்தையும் இறங்கிவிடுமோ எனும் பயமும், சந்தேகமும் பலரிடம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலைமையில், நீண்ட கால முதலீட்டாளர்கள் என்ன செய்வது நல்லது?
சந்தையின் ஏற்ற-, இறக்கம் பற்றி கவலைப்பட வேண்டாம்
சந்தை எங்கே போகும் என்ற கணிப்புகளில் இறங்காமல் இருக்கவும்
காதில் விழும் செய்திகள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை
கவனிக்க வேண்டியது சந்தையை அல்ல; நமது போர்ட்போலியோவை
போர்ட்போலியோவில் உள்ள பங்குகளின் தற்போதைய நிலையை மட்டுமே கவனிக்க வேண்டும்
முன்பு பங்குகளைத் தேர்ந்தெடுத்தபோது இருந்த சாதகமான காரணிகள் இப்போதும் இருக்கிறதா என்பதை பார்க்கவும்
அல்லது அந்தக் காரணிகள் குறைந்துள்ளதா என கவனிக்கவும்
புதிய பாதகங்கள் ஏதும் உருவாகியுள்ளதா என்பதை பார்க்கவும்
தேவையெனில், போர்ட்போலியோவில் மாற்றங்களைச் செய்து கொள்ளவும்
எப்போதுமே சரியான பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது தான் சிறந்த வழி
சந்தையின் போக்குக்கான காரணிகள்
பணப்புழக்கம் (Liquidity): சந்தையில் பணப்புழக்கம் அதிகமாக உள்ளது.
உள்நாட்டு முதலீட்டாளர்கள்: அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து விற்று வந்தாலும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதைவிட அதிகமான பணத்தை முதலீடு செய்கின்றனர்.
விலை ஏற்றத்திற்கான வாய்ப்பு: உள்நாட்டு முதலீட்டாளரின் இந்த அதிகப்படியான ஒதுக்கீடு குறையாத வரை, பங்குச்சந்தையில் பங்குகளின் விலை ஏற்றம் ஒரு தொடர்கதையாக இருக்க வாய்ப்புள்ளது.
நிஃப்டி நிலை
நிஃப்டி தற்போதைய நிலை: நிஃப்டி தற்போது அதன் வரலாற்று உச்சமான 26,277 (27-09-24) என்ற இடத்திற்கு அருகில் 25,868 (21-10-25) என்ற இடத்தில் உள்ளது.
முதலீட்டாளரின் கேள்வி: வரலாற்று உச்சத்தை கடந்து புதிய எல்லைகளை தொடுமா அல்லது தடுமாறி இறங்குமா என்பதே முதலீட்டாளர்களின் கேள்வி.