/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சமையல் எண்ணெய் ரகங்களின் விலையை உயர்த்தியது ஏன்? விளக்கம் கேட்கிறது மத்திய அரசு

ADDED : செப் 20, 2024 11:35 PM

புதுடில்லி: சமையல் எண்ணெய் விலையை அதிகரித்தது ஏன் என விளக்கம் தருமாறு, எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பாமாயில், சூரிய காந்தி, சோயா உட்பட சமையல் எண்ணெய் ரகங்களின் விலை, 1 லிட்டருக்கு 20 ரூபாய் வரை அதிகரித்துஉள்ளது.
உள்நாட்டில் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, சுத்திகரிக்கப்படாத சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை, மத்திய அரசு அண்மையில் 20 சதவீதம் அதிகரித்தது.
எனினும், அடுத்த 45 முதல் 60 நாட்களுக்கு தேவையான அளவு, சமையல் எண்ணெய் ரகங்கள், பழைய வரி விதிப்பில் இறக்குமதி செய்யப்பட்டு இருப்பு இருப்பதால், அவை தீரும் வரை, சமையல் எண்ணெய் விலையை உயர்த்த வேண்டாம் என அரசு அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், தன் அறிவுறுத்தலை மீறி, சமையல் எண்ணெய் ரகங்களின் விலையை உயர்த்தியது ஏன் என விளக்கம் அளிக்குமாறு, எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், மொத்தவிலை விற்பனையாளர்களின் சங்கங்களிடம் விளக்கம் கேட்டுள்ளதாக, மத்திய உணவு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.