/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
நேற்றொரு தோற்றம், இன்றொரு மாற்றம்
/
நேற்றொரு தோற்றம், இன்றொரு மாற்றம்
ADDED : நவ 22, 2024 11:47 PM

• வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் அதிக உயர்வுடன் நிறைவடைந்தன. நிப்டி 2.39 சதவீதமும்; சென்செக்ஸ் 2.54 சதவீதமும் உயர்வு கண்டன. இதன் வாயிலாக, தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் கண்ட சரிவுக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டது
• உலகளாவிய மற்றும் ஆசிய சந்தை போக்குகளின் தொடர்ச்சியாக, வர்த்தகம் ஆரம்பித்த போதே பங்குச் சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின நகரமயமாக்கல், அடிப்படை கட்டமைப்பு மற்றும் நுகர்வு ஆகிய துறைகளில், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் அதீத ஆர்வம் காட்டியதால், சந்தை குறியீடுகள் ஐந்து மாதங்களில் காணாத உச்சத்தை பதிவு செய்தன
• நிப்டி குறியீட்டில், பஜாஜ் ஆட்டோ தவிர, பிற துறை பங்குகள் ஏற்றம் கண்டன. அதிகபட்சமாக, ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பங்குகள் 6.26 சதவீதம் உயர்வு கண்டன
• மும்பை பங்கு சந்தையில், 2,450 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும்; 1,472 நிறுவனங்களின் பங்குகள் குறைந்தும்; 119 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றி வர்த்தகமாகின. நேற்றைய உயர்வால், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு, ஒரே நாளில் 7.2 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, மொத்த சந்தை மதிப்பு 432.55 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று ---1,278 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.13 சதவீதம் அதிகரித்து, 74.33 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 9 பைசா அதிகரித்து, 84.41 ரூபாயாக இருந்தது.
டாப் 5 நிப்டி 50 பங்குகள்
அதிக ஏற்றம் கண்டவை
எஸ்.பி.ஐ.,
பஜாஜ் பைனான்ஸ்
டைட்டன்
ஐ.டி.சி.,
டி.சி.எஸ்.,
அதிக இறக்கம் கண்டவை
பஜாஜ் ஆட்டோ