/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'காலக்கெடுவுக்கு பணிந்து ஒப்பந்தம் செய்ய முடியாது'
/
'காலக்கெடுவுக்கு பணிந்து ஒப்பந்தம் செய்ய முடியாது'
'காலக்கெடுவுக்கு பணிந்து ஒப்பந்தம் செய்ய முடியாது'
'காலக்கெடுவுக்கு பணிந்து ஒப்பந்தம் செய்ய முடியாது'
ADDED : செப் 02, 2025 11:44 PM

புதுடில்லி:''இந்தியாவின் வர்த்தக பேச்சுக்கு காலக்கெடு விதித்தால், அதற்கு பணிந்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாது என்று'' மத்திய வர்த்தக அமைச்சர், பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
மத்திய அரசு, எப்போதுமே காலக்கெடுவை நிர்ணயித்து வர்த்தக விவாதங்கள் மேற்கொள்வதில்லை.
அதேபோல், மற்றவர் விதிக்கும் காலக்கெடுவுக்கு பணிந்தும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாது. இருதரப்புக்கும் சாதகமான நல்ல ஒப்பந்தங்களை மட்டுமே விவாதிப்போம்.
அமெரிக்காவுடன் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரியை இந்தியா பூஜ்ஜியமாக குறைக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் ஏற்கனவே காலம் கடந்து விட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் தெரிவித்திருந்த நிலையில், பியுஷ் கோயல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.