/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
கர்நாடகாவில் 'சிப்' ஆலை 'ஜோஹோ' அமைக்கிறது
/
கர்நாடகாவில் 'சிப்' ஆலை 'ஜோஹோ' அமைக்கிறது
ADDED : டிச 25, 2024 01:32 AM

பெங்களூரு:கர்நாடகாவின் முதல் செமிகண்டக்டர் தயாரிப்பு ஆலையை, 3,426 கோடி ரூபாய் முதலீட்டில், தமிழகத்தைச் சேர்ந்த, 'சில்லெக்ட்ரிக்' நிறுவனம் அமைக்க உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 'ஜோஹோ' கார்ப்பரேஷனுக்கு முழுதும் சொந்தமான சில்லெக்ட்ரிக் நிறுவனம், கர்நாடகாவின் மைசூர் அருகே கொச்சனஹள்ளி மின்னணு தயாரிப்பு மையத்தில், செமிகண்டக்டர் தயாரிப்பு ஆலையை அமைக்க உள்ளது. நேற்று முன்தினம் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான உயர்மட்ட அனுமதி குழு, இதற்கான ஒப்புதலை அளித்து உள்ளது.
கிட்டத்தட்ட 40 ஏக்கர் பரப்பளவில் அமையும் ஆலையில், சிலிக்கான் கார்பைடு அடிப்படையிலான 'பேப்' தயாரிப்பு மற்றும் செமிகண்டக்டர் ஒருங்கிணைப்பு, பரிசோதனை மற்றும் குறியிடுதல், பேக்கிங் பணிகள் நடைபெற உள்ளன.
இதன் வாயிலாக, 460 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமென கூறப்பட்டு உள்ளது.

