/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சொமாட்டோவுக்கு 3 நாளில் இழப்பு ரூ.38,000 கோடி
/
சொமாட்டோவுக்கு 3 நாளில் இழப்பு ரூ.38,000 கோடி
ADDED : ஜன 22, 2025 11:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை:சொமாட்டோ நிறுவனம், சமீபத்தில் மூன்றாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இதில், முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் நிகர லாபம் 57 சதவீதம் சரிவை கண்டிருந்தது.
இந்த எதிர்மறை தகவலால், கடந்த மூன்று வர்த்தக நாட்களில், சொமாட்டோ வின் பங்கு விலை, 18.10 சதவீதம் இறக்கம் கண்டது. அதனால், சந்தை மதிப்பு 44,600 கோடி ரூபாய்க்கு மேல் சரிந்து, 2.01 லட்சம் கோடி ரூபாயானது.
நேற்றைய வர்த்தகத் தில், 1 சதவீதம் உயர்வு கண்டதால், அதன் சந்தை மதிப்பு 2.08 லட்சம் கோடி ரூபாயாகி, இழப்பில் இருந்து 7,000 கோடி ரூபாய் மீட்கப்பட்டது.

