UPDATED : டிச 23, 2025 01:18 AM
ADDED : டிச 23, 2025 01:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்குச்சந்தை நடப்பாண்டில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், நாட்டின் முன்னணி நிறுவனங்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களின் எண்ணிக்கை, 110 ஆக உயர்ந்துள்ளது. இதுவே, 2024ம் ஆண்டில் 97 நிறுவனங்கள் மட்டுமே ஒரு லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டியிருந்தன.
அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக, 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' 20.89 லட்சம் கோடி ரூபாயுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இதைத் தொடர்ந்து, எச்.டி.எப்.சி., வங்கி மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனமும் உள்ளன.
மேலும், 20 நிறுவனங்கள் நடப்பாண்டில் முதன்முறையாக ஒரு லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு என்ற மைல்கல்லை எட்டியுள்ளன.

