sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 வலுவடையும் டாலர் மதிப்பு வெள்ளி விலை பெரும் சரிவு

/

 வலுவடையும் டாலர் மதிப்பு வெள்ளி விலை பெரும் சரிவு

 வலுவடையும் டாலர் மதிப்பு வெள்ளி விலை பெரும் சரிவு

 வலுவடையும் டாலர் மதிப்பு வெள்ளி விலை பெரும் சரிவு


ADDED : மார் 17, 2026 01:11 AM

Google News

ADDED : மார் 17, 2026 01:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

க டந்த சில வாரங்களாக உச்சத்தில் இருந்த வெள்ளி விலை, நேற்று பலத்த சரிவை சந்தித்துள்ளது. எம்.சி.எக்ஸ்., சந்தையில் மே மாதத்துக்கான முன்பேர வர்த்தக ஒப்பந்தத்தில் ஒரு கிலோ வெள்ளியின் விலை, நேற்று மாலை நிலவரப்படி கிட்டத்தட்ட 8,500 ரூபாய்க்கு மேல் சரிந்து, 2.51 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமானது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி 79.29 டாலராக குறைந்துள்ளது.

முக்கியக் காரணங்கள்

 அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் 3வது வாரமாக தொடர்வதால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பானதாக கருதி டாலரில் அதிகமாக முதலீடு செய்கின்றனர்

 ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டு தாக்குதல்கள் மற்றும் 'ஹார்முஸ் ஜலசந்தி' மூடப்பட்டதால், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியுள்ளது

 நடப்பு மார்ச் மாதம், நிதியாண்டு இறுதி என்பதால், நகைக்கடை உரிமையாளர்கள் புதிய கொள்முதலை தவிர்த்து வருகின்றனர். மேலும், கடந்த வாரம் வெள்ளி விலை உச்சத்தில் இருந்ததால் மக்கள் வாங்குவதை குறைத்துள்ளனர்

 இந்த வாரம் அமெரிக்காவின் 'பெடரல் ரிசர்வ்' உள்ளிட்ட முக்கிய உலக நாடுகளின் மத்திய வங்கி கூட்டங்கள் நடைபெற உள்ளன. வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்குமோ என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பதாக தெரிகிறது.






      Dinamalar
      Follow us