sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

ஆயிரம் சந்தேகங்கள்

/

ஆயிரம் சந்தேகங்கள்: தங்கத்தை அடகு வைத்து பங்கு முதலீடு செய்யலாமா?

/

ஆயிரம் சந்தேகங்கள்: தங்கத்தை அடகு வைத்து பங்கு முதலீடு செய்யலாமா?

ஆயிரம் சந்தேகங்கள்: தங்கத்தை அடகு வைத்து பங்கு முதலீடு செய்யலாமா?

ஆயிரம் சந்தேகங்கள்: தங்கத்தை அடகு வைத்து பங்கு முதலீடு செய்யலாமா?


ADDED : நவ 03, 2025 12:53 AM

Google News

ADDED : நவ 03, 2025 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என் வயது 63. கடன் பண்டுகள் ஒரு முறை முதலீடாக செய்வது லாபமாக இருக்குமா அல்லது எஸ்.ஐ.பி., முதலீடாக பண்ணுவது தான் சிறந்ததா? இரண்டையும் ஒப்பிட்டால் கிடைக்கும் வருமானம் எந்த பிரிவில் எவ்வாறு அதிகம்?

ஆர்.சுப்புராஜ், மதுரை.

ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து குறையும் சூழ்நிலையில், கடன் பண்டுகளில் ஒரு முறை முதலீடாக செய்வது லாபமாக இருக்கும். அமெரிக்காவில் தற்போது கடன் வட்டி குறைந்துள்ளதால், நம் நாட்டிலும் விரைவில் வட்டி விகிதங்கள் சரியும். அதேசமயம், எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்யும் போது, வட்டி விகித சரிவின் போதும், கடன் பண்டுகள், வருவாயை ஓரளவுக்கு சமன்படுத்தி கொடுக்கும். ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு முறை முதலீடாகவும், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை எஸ்.ஐ.பி., வாயிலாகவும் முதலீடு செய்யுங்கள்.

என்னிடம் உள்ள தங்க நகைகளை அடமானமாக வைத்து, தங்க இ.டி.எப்., அல்லது ஷேர்களில் முதலீடு செய்யலாமா?

லட்சுமி, மின்னஞ்சல்.

இந்த விஷயத்தில் நான் பழமைவாதி; வேண்டாம் என்று தான் சொல்வேன். தங்கமும், பங்குகளும் வேகமாக லாபத்தை ஈட்டி தரும் என்ற நம்பிக்கையில் இந்த கேள்வியை கேட்கிறீர்கள். நேற்று வரை இப்படி இருந்தன என்பது உண்மை. ஆனால், நாளையும் அப்படி இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

உங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக, இந்த இரண்டு சொத்து வகைகளும் வீழ்ச்சி அடைந்தால், அப்போது அதை தாங்கிக்கொள்ளும் சக்தி உங்களுக்கு இருக்கிறதா என்று பாருங்கள். ஏனெனில் தங்க நகைகளை அடகு வைத்தால், குறைந்தபட்ச வட்டியே 8, 9 சதவீதம் செலுத்த வேண்டியிருக்கும். அதைவிட அதிகமாக தங்கமும், பங்குகளும் ஈட்டி தந்தால் மட்டுமே அது லாபம். அடுத்த சில ஆண்டுகளில் அப்படி நடக்குமா என்பதை உறுதியாக சொல்வதற்கில்லை.

திட்டமிட்டு சேமித்தோ அல்லது உபரியாக சேரும் பணத்தையோ, தங்க இ.டி.எப்., பங்குகளில் முதலீடு செய்யுங்கள். கடன் வாங்கி செய்ய வேண்டாம்.

கடந்த ஓராண்டாக பங்கு சந்தை மியூச்சுவல் பண்டுகளில் எஸ்.ஐ.பி., போட்டு வருகிறேன். பெரிதாக வளர்ச்சியே இல்லையே?

தனலட்சுமி, விழுப்புரம்.

கடந்த ஓராண்டில் என்ன நடந்தது என்று பாருங்கள். செப்டம்பர் 2024க்கு பிறகு, நம் பங்கு சந்தையில் கடுமையான ஏற்ற இறக்கம். அமெரிக்கா பல நாடுகளின் மீது விதித்த இறக்குமதி வரி, ஒருவிதமான நிலையற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. 2025 முடிவுக்கு வரும் இந்த சூழலிலும் இன்னும் தெளிவு ஏற்படவில்லை. இதனால், பல பங்குகள் விலை உயரவில்லை. என்ன தான் தேடி தேடி முதலீடு செய்தாலும், முதலீட்டு மேலாளர்களால் பெரிய லாபம் ஈட்ட முடியவில்லை.

ஒரு விஷயம். ஓராண்டு ரிட்டர்னை மட்டும் வைத்து ஒரு பண்டை அளவிடுவது சரியாக இருக்காது. அதே பண்டு, மூன்றாண்டு, ஐந்தாண்டு காலகட்டத்தில் என்ன வருவாயை ஈட்டி தந்திருக்கிறது என்று பாருங்கள். அது இன்னும் கொஞ்சம் நம்பிக்கை அளிப்பதாக இருக்கும்.

வரன் பார்த்து தரப்படும் என்று விளம்பரம் செய்த ஒரு திருமண தகவல் மையத்தில், அவர்கள் சொன்ன வங்கி அக்கவுன்டில் 4,000 ரூபாய் கட்டினேன். ஒரு வரன் கூட அனுப்பாமல் ஏமாற்றி விட்டனர். அந்த வங்கியின் நோடல் அலுவலரிடம் புகார் தரலாமா; நடவடிக்கை எடுப்பரா?

ஆர்.பிரேம்குமார், சென்னை

வங்கி இதில் எதுவும் செய்ய முடியாது. இது முற்றிலும் சேவை தரத்தில் உள்ள குறைபாடு தொடர்பானது. விளம்பரம் ஒன்றாக இருக்கும், பதிவு செய்ய போகும்போது, பொடி எழுத்தில் பல்வேறு விலக்குகளை குறிப்பிட்டிருப்பர். அதை பார்க்காமல் நீங்கள் ஒப்புக் கொண்டிருக்கவும் வாய்ப்புண்டு.

சம்பந்தப்பட்ட திருமண தகவல் மையத்தையே தொடர்பு கொண்டு, பணத்தை திருப்பி கேளுங்கள்; உரிய பதில் இல்லையெனில், தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் https://consumerhelpline.gov.in/public/ என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யுங்கள்.

மாதாமாதம் ஓ.டி.டி., சந்தாக்கள் கண்ணுக்கு தெரியாமல் பணத்தை கரைத்து விடுகின்றன. எப்படி கையாள்வது?



ரமேஷ் கண்ணன், கோவை.

இது மட்டுமல்ல, பல ஆன்லைன் சந்தாக்களிலும் இதே பிரச்னை உண்டு. 'ஆட்டோ ரினீவல்' என்ற வசதி நம் மீது திணிக்கப்படுவதால், தொடர்ச்சியாக மாதாந்திர பட்ஜெட்டில் இடம் பெறாமலேயே, இந்த தொகைகள் வங்கியில் இருந்து கழிக்கப்பட்டு விடுகின்றன. பயனர் தான் திட்டமிட வேண்டும்.

முதலில் இத்தகைய ஓ.டி.டி., சேவைகளை பயன்படுத்துகிறீர்களா என்று பாருங்கள். பலரும் பணத்தை கட்டிவிட்டு, பயன்படுத்துவதே இல்லை. இப்போதெல்லாம் பல ஓ.டி.டி.,யில் புதுப்படங்களே வருவதில்லை.

அந்த கால 'டிவி' நாடகங்கள் , 'வெப் சீரீஸ்' என்ற புது அவதாரம் எடுத்து ஓடிக்கொண்டு இருக்கின்றன.

ஒருநாள் முனைந்து உட்கார்ந்து எதையெல்லாம் பயன்படுத்தவில்லையோ, அந்த சந்தாக்களை நிறுத்துங்கள். இணைய இணைப்புகளோடு பல பொழுதுபோக்கு வசதிகள் பொட்டலம் கட்டி தரப்படுகின்றன. அது போன்ற ஏதேனும் ஒன்றை மட்டும் பெற்றுக்கொண்டால், பெருமளவு செலவு குறைய வாய்ப்புள்ளது.

மீண்டும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை, ஆர்.பி.ஐ., திரும்ப வாங்கிக் கொள்கிறது என்று சொல்லப்படுகிறதே, உண்மையா?



ஜி.விக்னேஷ்வரன், செங்கல்பட்டு.

இல்லை. இப்படி ஒரு செய்தி வைரலாக சுற்றிக்கொண்டு இருக்கிறது. ஆனால், மத்திய அரசின் பி.ஐ.பி., தகவல் உறுதிப்படுத்தும் குழு, இப்படிப்பட்ட எந்த திட்டத்தையும் ஆர்.பி.ஐ., நடைமுறைப்படுத்தவில்லை என்பதை தெரிவித்துள்ளது. இதேபோல், பி.எப்., ஓய்வூதியம் 1,000 ரூபாயில் இருந்து 7,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்று பல வலைதளங்களும், ஷார்ட்ஸ், ரீல்ஸ்களும் தவறான செய்தி சொல்லி வருகின்றன.

சமீபத்தில் நடைபெற்ற இ.பி.எப்.ஓ.,வின் மத்திய குழுவின் கூட்டத்தில், 'ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான பரிந்துரை மத்திய அரசின் தீவிர பரிசீலனையில் இருக்கிறது' என்று ஓர் உறுப்பினர் சொன்னார் என்று தான் செய்தி வெளியாகியிருக்கிறதே தவிர, எந்தவிதமான ஒப்புதலும் வழங்கப்படவில்லை. அதற்குள் எனக்கு எண்ணற்ற மின்னஞ்சல்கள் வந்து குவிகின்றன. எது நெல், எது உமி என்று பிரித்து பார்த்து புரிந்துகொள்ளுங்கள்.

வாசகர்களே,

நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்






      Dinamalar
      Follow us