/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
வோடாபோன் விவகாரம் : ரூ.8,500 கோடி வரி பாக்கி வழக்கு திரும்ப பெற்றது வருமான வரித்துறை
/
வோடாபோன் விவகாரம் : ரூ.8,500 கோடி வரி பாக்கி வழக்கு திரும்ப பெற்றது வருமான வரித்துறை
வோடாபோன் விவகாரம் : ரூ.8,500 கோடி வரி பாக்கி வழக்கு திரும்ப பெற்றது வருமான வரித்துறை
வோடாபோன் விவகாரம் : ரூ.8,500 கோடி வரி பாக்கி வழக்கு திரும்ப பெற்றது வருமான வரித்துறை
ADDED : நவ 04, 2025 11:54 PM

புதுடில்லி, நவ. 5-
வோடபோன் நிறுவனத்தின் மீது 8,500 கோடி ரூபாய் வரி பாக்கி தொடர்பாக தொடர்ந்த வழக்கை வருமான வரித்துறை திரும்ப பெற்றுள்ளது.
கடந்த 2007- -08 நிதியாண்டில் வோடபோன் இந்தியா, தனது மறு சீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக தனக்கு சொந்தமான த்ரி குளோபல் சர்வீசஸ் என்ற நிறுவனத்தை ஹட்சிசன் வாம்போவா பிராப்பர்டிஸ் நிறுவனத்துக்கு விற்பனைசெய்தது.
இது ஒரு வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கை என்று கூறிய வருமான வரித்துறை, இதன்மூலம் வோடபோன் வருவாய் ஈட்டியிருப்பதாகவும், அதற்கு வருமான வரியாக 8,500 கோடி ரூபாய் வரி செலுத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி வழக்கு தொடர்ந்தது.
இரண்டு இந்திய நிறுவனங்களுக்குள் நடைபெற்ற பரிமாற்றம்தான் இது எனவும், இதில் வரி ஏய்ப்பு நடைபெறவில்லை என்றும் வாதிட்டது. வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம், இதை ஏற்க மறுத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வோடபோன் நிறுவனம் முறையிட்டது.
அதை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், கடந்த 2015 அக்டோபரில் வருமான வரித்துறையின் கோரிக்கையை நிராகரித்தது. மேற்கண்ட விற்பனை, இரண்டு இந்திய நிறுவனங்களுக்குள் தான் நடைபெற்றது எனவும், நாட்டுக்கு வெளியே நடைபெறவில்லை எனவும் தீர்ப்பளித்தது.
அதனையடுத்து இவ்வழக்கு 2016ல் உச்சநீதிமன்றத்துக்கு சென்றது. அதில் எவ்விதமான முன்னேற்றமும் இன்றி கிடப்பில் இருந்தது. இந்நிலையில், அவ்வழக்கை திரும்ப பெற விரும்புவதாக வருமான வரித்துறை ஆணையர் நீதிமன்றத்தில் நேற்று மனு சமர்ப்பித்தார்.
சாராம்சம்: கடந்த 2007-08 ல் தனது த்ரி குளோபல் நிறுவனத்தை வோடபோன் விற்பனை செய்ததில் ரூ.8,500 கோடி வரி செலுத்த உத்தரவிடக்கோரி வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. 2015ல் மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு, வோடபோனுக்கு சாதகமாக வெளியான நிலையில், 2016ல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வருமான வரித்துறை, வழக்கில் முன்னேற்றம் இல்லாததால் வாபஸ் பெற்றுள்ளது.

