sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

ஆயிரம் சந்தேகங்கள்

/

ஆயிரம் சந்தேகங்கள்: எட்டாக் கனியாகிவிட்ட தங்கம் எப்போது எட்டும்?

/

ஆயிரம் சந்தேகங்கள்: எட்டாக் கனியாகிவிட்ட தங்கம் எப்போது எட்டும்?

ஆயிரம் சந்தேகங்கள்: எட்டாக் கனியாகிவிட்ட தங்கம் எப்போது எட்டும்?

ஆயிரம் சந்தேகங்கள்: எட்டாக் கனியாகிவிட்ட தங்கம் எப்போது எட்டும்?


ADDED : ஏப் 28, 2025 12:54 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 12:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நான் ஒரு தனியார் நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் ஏழு மாதங்களாக தொடர்ந்து பணிபுரிந்து வருகிறேன். எனக்கு வேறொரு புதிய வேலை கிடைத்துள்ளது. இப்போது செய்து கொண்டிருக்கும் வேலையை ராஜினாமா செய்தால், இரண்டு மாதங்கள் நோட்டீஸ் பீரியட் இருக்கும். ஆக மொத்தம் நான்கு ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் கணக்கில் வரும்.

இந்நிலையில் எனக்கு கிராஜூட்டி கிடைக்குமா? கிராஜூட்டிக்கு ஐந்து ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்பது விதி. ஆனால், நான்கு ஆண்டுகள் எட்டு மாதங்கள் பணிபுரிந்தாலும், கிராஜூட்டி கிடைக்கும் என சில டிஜிட்டல் தளங்களில் பார்த்தேன். இது சரிதானா?

ரா.வ.பாலகிருஷ்ணன்,

திருவள்ளூர்

சரியில்லை. தர மாட்டார்கள். ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்தால் தான் பணிக்கொடை தொகையை தருவர். ஒரு விஷயம்.

உங்களுக்கு கிடைத்திருக்கும் அடுத்த வேலை மிகச் சிறப்பானது, நல்ல வருவாய் தருவது, முன்னேற்றத்துக்கு உகந்தது என்று தோன்றினால், பணிக்கொடையைப் பற்றி கவலைப்படாமல் கிளம்புங்கள் அல்லது பணிக்கொடை வாங்கிக்கொண்டு தான் கிளம்ப வேண்டும் என்று எண்ணம் இருந்தால், இன்னும் ஐந்து மாதங்கள் தாக்கு பிடியுங்கள்.

கடந்த 2011ல், 50 வயதில் வி.ஆர்.எஸ்., கொடுத்துவிட்டு, ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து வெளியேறினேன். பி.எப்., பென்ஷன் 802 ரூபாய் வருகிறது. இப்போது என் வயது 63. முழு பென்ஷன் கிடைக்க வாய்ப்புண்டா?

எஸ்.ரமேஷ், மின்னஞ்சல்

ஒருமுறை நிர்ணயிக்கப்பட்ட பென்ஷன் தொகையை மாற்றுவதற்கு வாய்ப்பில்லை என்று பி.எப்., வலைதளம் தெளிவாகச் சொல்கிறது.

அதாவது, 50 வயதில் தாங்கள் குறைந்த ஓய்வூதியத்துக்கு ஒப்புக்கொண்டு, அதை பெற்று வருவதால், அதை உயர்த்திக்கொள்ள முடியாது என்பது பொருள். ஒரு முறை உங்கள் அருகே இருக்கும் பி.எப்., அலுவலகத்துக்கு சென்று விசாரித்து பாருங்கள்.

குறுகிய காலத்தில் மிக மிக வேகமாக விலை உயர்ந்து நிற்கும் தங்கம், எட்டும் கனி என்ற நிலைமை ஒரு காலத்தில் வருமா?

வி.எஸ்.ராமு, திண்டுக்கல்

வரலாம் என்று தங்கத்தை பற்றிய ஆய்வுகள் சொல்கின்றன. வெறும் 10, 20 ஆண்டு காலம் என்று எடுத்துக்கொள்ளாமல், கடந்த 50 ஆண்டுகளில் தங்கத்தின் விலை எப்படி இருந்தது என்று பார்த்தால், நீங்கள் சொல்வது போல் நடந்திருப்பது தெரிகிறது.

அதாவது, செப்டம்பர் 1980ல், 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 666 டாலரை தொட்டது. 19 ஆண்டுகள் கழித்து, செப்டம்பர் 1999ல் அதே 1 அவுன்ஸ் தங்கம் 255 டாலருக்கு விற்பனை ஆனது. 62 சதவீதம் சரிவு. ஒரு அவுன்ஸ் மீண்டும் 666 டாலரை தொட்டது 2007ல் தான். அதாவது 27 ஆண்டுகள் கழித்து. அடுத்து 2012ல் 1 அவுன்ஸ் தங்கம் 1,772 டாலரை தொட்டது.

ஆனால், மூன்றே ஆண்டுகளில் 1,062 டாலருக்கு சரிந்தது. எட்டு ஆண்டுகள் கழித்து, மீண்டும் 2020 கொரோனா காலத்தில் உச்சத்தை தொட்டது.

அதாவது தங்கம் விலை உயர்ந்துகொண்டே போகும் என்ற எதிர்பார்ப்பில், அதில் உங்கள் அத்தனை முதலீட்டையும் செய்ய வேண்டாம் என்பதே இதன் பின்னே உள்ள செய்தி. உங்கள் மொத்த முதலீட்டு போர்ட்போலியோவில், 5 சதவீதத்துக்கு தங்கத்தில் முதலீடு செய்யலாம்.

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்








      Dinamalar
      Follow us