சிட்டி யூனியன் வங்கி பங்கு விலை 4 சதவிகிதம் உயர்வு
சிட்டி யூனியன் வங்கி பங்கு விலை 4 சதவிகிதம் உயர்வு
ADDED : நவ 25, 2025 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் புதிதாக மூன்று வங்கி கிளைகளை துவங்கியுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, சிட்டி யூனி யன் வங்கியின் பங்கு விலை நேற்று நான்கு சதவீதம் வரை அதிகரித்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கட்டாத்தி, திருச்சி மாவட்டம் ஆலம்பாடி, திருப்பத்துார் மாவட்டம் வீரான் குப்பம் ஆகிய இடங்களில் மூன்று புதிய கிளைகளை திறந்துள்ளதாக, பங்குச் சந்தைகளில் தாக்கல் செய்த அறிக்கையில் சிட்டி யூனியன் வங்கி தெரிவித்துள்ளது. இதோடு சேர்த்து நாடு முழுதும் வங்கிக்கு 896 கிளைகள் உள்ளன.
இந்த தகவல் வெளி யானதும், நிறுவனத்தின் பங்கு விலை உயர்வு கண்டது. நேற்று வர்த்தக நேர இறுதியில், தேசிய பங்குச் சந்தையில் விலை 3.98 சதவீதம் அதிகரித்து, 273.19 ரூபாய்க்கு வர்த்தகமானது.

