தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ துளிகள்

 துளிகள்

 துளிகள்


UPDATED : செப் 03, 2026 04:24 AM

ADDED : செப் 03, 2026 04:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2026 04:24 AM ADDED : செப் 03, 2026 04:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏ.டி.எம்., கட்டணத்தை உயர்த்திய கனரா வங்கி

சே மிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கான ஏ.டி.எம்., மற்றும் பணம் செலுத்தும் இயந்திரம் தொடர்பான சில கட்டணங்களை 'கனரா வங்கி' செப்டம்பர் 1 முதல் மாற்றியுள்ளது.

வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு கனரா வங்கி ஏ.டி.எம்.,களில் மாதத்துக்கு இலவச பரிவர்த்தனைகள் 6ல் இருந்து 5 ஆக குறைக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்களுக்கு 8 இலவச பரிவர்த்தனைகள் தொடர்கின்றன.

இலவச வரம்புக்கு பின், பணம் எடுப்பது உள்ளிட்ட நிதி பரிவர்த்தனைக்கான கட்டணம் 20 ரூபாயில் இருந்து 23 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நிதி சாராத பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் 5 ரூபாயாக தொடர்கிறது. இவற்றிற்கு ஜி.எஸ்.டி.,யும் செலுத்த வேண்டும்.

Image 1615452




யு.பி.ஐ., பரிவர்த்தனைக்கு தனிப்பட்ட வரம்பு

வா டிக்கையாளர்கள் தங்களது யு.பி.ஐ., பரிவர்த்தனைகளுக்கு தனிப்பட்ட வரம்பை நிர்ணயிக்கும் புதிய வசதியை 'ஆக்சிஸ் வங்கி' அறிமுகப்படுத்தியுள்ளது.

'யு.பி.ஐ., லிமிட் மேனேஜ்மென்ட்' என்ற இந்த வசதி வாயிலாக, ஒருவருக்கு ஒருவர் பணம் அனுப்புவது, உள்நாட்டு மற்றும் சர்வதேச வணிக நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது என, ஒவ்வொரு வகைக்கும் தனித்தனி வரம்பை அமைக்கலாம்.

இ தற்கான அதிகபட்ச தொகையை, வங்கி இன்னும் வெளியிடவில்லை. வாடிக்கையாளர் தங்களுக்கு தேவையான குறைந்த பரிவர்த்தனை வரம்பை அமைத்துக்கொள்ளலாம். இதனால் அங்கீகரிக்கப்படாத அல்லது தவறுதலான அதிக தொகை பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்த உதவும்.

முக்கியமாக, ஆக்சிஸ் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து யு.பி.ஐ., செயலிகளிலும் இந்த வரம்பு பொருந்தும். தற்போது குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த வசதி வழங்கப்பட்டு, பின்னர் அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஸர்பே நிறுவனத்தின் பு திய வசதி அறிமுகம்

'ரேஸர்பே' நிறுவனம், வணிக நிறுவனங்கள் தங்களது பண பரிவர்த்தனைகளை வாட்ஸாப் வாயிலாக நிர்வகிக்க உதவும் 'ரே' என்ற ஏ.ஐ., அடிப்படையிலான கணக்கு மேலாளர் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வசதி 'இண்டஸ்இண்ட்' வங்கியுடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. வணிக நிறுவனங்கள் வாட்ஸாப் குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவு வாயிலாக பண பரிவர்த்தனை விபரங்கள், வசூல் தொகை, பணத்தை கணக்கில் வரவு வைக்கும் செயல்முறை உள்ளிட்ட தகவல்களை பெறலாம்.

மேலும், பேமென்ட் லிங்க் உருவாக்குதல், பணத்தை திருப்பி அனுப்புதல் போன்ற சில செயல்களையும் ரே வாயிலாக மேற்கொள்ள முடியும். வங்கியின் விடுமுறை காரணமாக, கணக்கு முடிப்பு தாமதமாகும் வாய்ப்பு இருந்தால், அதற்கான எச்சரிக்கையையும் வழங்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us