ADDED : நவ 08, 2025 04:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப ங்குச்சந்தையில், 'ஷார்ட் செல்லிங்' நடைமுறை குறித்து விரிவாக ஆய்வு செய்ய, ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும் என, செபியின் தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார். முன்பேர வணிகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள், தங்களிடம் இல்லாத பங்குகளை அதிக விலைக்கு விற்று, பின் குறைந்த விலைக்கு வாங்கி லாபம் ஈட்டுவர். இந்த நடைமுறை மற்றும் எஸ்.எல்.பி., எனப்படும் பங்குகளை கடன் கொடுத்து வாங்குவது உள்ளிட்டவை, உலகளாவிய சந்தைகளுடன் ஒப்பிடும்போது, இந்திய பங்குச்சந்தைகளில் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை என செபி கருதுகிறது. எனவே, இந்த கட்டமைப்புகளை மேம்படுத்த, இந்த ஆய்வு தேவைப் படுவதாக செபி தலைவர் தெரிவித்துள்ளார்.

