தரகு கட்டணத்தை உயர்த்த பண்டு நிறுவனங்கள் கோரிக்கை
தரகு கட்டணத்தை உயர்த்த பண்டு நிறுவனங்கள் கோரிக்கை
ADDED : நவ 26, 2025 12:53 AM

தரகு கட்டணத்தை இரண்டு அடிப்படை புள்ளிகளாக நிர்ணயிக்க, செபி முன்மொழிந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. மொத்த செலவு விகிதத்தை திருத்துவதற்கான பெரிய திட்டத்தின் கீழ், தற்போது 12 அடிப்படை புள்ளிகள் வரை செலுத்தப்படும் தரகு கட்டணத்தை இரண்டு அடிப்படை புள்ளிகளாக குறைக்க, செபி அண்மையில் முன்மொழிந்தது.
இது, நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றும்; தரகர்கள் வழங் கும் ஆய்வறிக்கைகள் மற்றும் வர்த்தக சேவைகளின் தரத்தைப் பாதிக்கும் எனவும், செயல்பாட்டு சவால்களை கருத்தில் கொண்டு, தரகு கட்டணத்தை 6 முதல் 7 அடிப்படை புள்ளிகள் வரை நிர்ணயிக்க வேண்டும் எனவும் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
இது குறித்து ஆய்வு செய்த பின்னரே, மொத்த செலவு விகிதத்தின் புதிய கட்டமைப்பை செபி இறுதிசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

